நான் சந்திக்க விரும்பும் நபர்

நான் சந்திக்க விரும்பும் நபர் இங்கிலாந்து மட்டைப்பந்து விளையாட்டு வீரர் ஜோ ரூட். அவர் இங்கிலாந்து அணியின் தலைவர். அவரைச் சந்தித்து நான் அவரிடம் பல அறிவுரைகளைப் பெற்று அவரைப் போல விளையாடுவது எப்படி என்று கேட்டுக் கொள்வேன். அவரின் நல்லொழுக்கங்களையும் நான் என் ஆட்டத்தின் போது பின்பற்றுவேன். அவரை என் வழிகாட்டியாகப் பின்பற்றுவேன். அவர் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் உலக ஓ.டி.ஐ பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். அவர் மொத்தமாக முப்பது மூன்று சதம் அடித்துள்ளார். அவர் தான் இங்கிலாந்து நாட்டைக் காப்பாற்றுகின்ற வீரர். அவர் சுழற் பந்து  வீச்சாளர். தம் முதல் ஆட்டம் ஆரம்பித்தது முதல் இங்கிலாந்தின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவரைப் போலவே நானும் ஒரு ஒழுக்கமுள்ள நல்ல வீரரனாக வலம் வருவேன்.

வெ. சாய்கிருஷ்ணா

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் மெஸ்ஸி. அவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். அவர் மிகவும் வறுமையில் இருந்து, குப்பைப் பெட்டிகளை வைத்துத் தெரு ஓரங்களில் விளையாடி வளர்ந்தார். இன்று அவர் உலகம் அறியும் மிகப் பெரிய கால்பந்து விளையாட்டு வீரராகியுள்ளார். நான் அவரின் மிகப்பெரிய இரசிகன். நான் அவரைச் சந்தித்து அவர் எப்படி அவருடைய வறுமையிலிருந்து மீண்டு எழுந்து வந்து புகழ் பெற்றார் எனக் கேட்பேன்.

                                                     சோனு ஜேக்கப்

ஒன்பதாம் வகுப்புஆ பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் ஏ.ஆர்.ரஹ்மான்.எனக்கு இசை மீது ஆர்வம் கிடையாது. ஆனால் அவரைப் பார்ப்பதன் நோக்கம் அவர் தொடர்ந்து சாதனை படைத்தும் தலைக்கனம் இல்லாமல் எளிமையாகவும் இருப்பதுதான். அவர் அடிக்கடி கூறும் வாசகம் “ எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பது அவ்வாசகத்தில் தன் இறையுணர்வை வெளிப்படுத்துகிறார். தாம் இசிலாமியனாகப் பிறந்தாலும் தமிழ் திரைப்படங்களின் பல பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது இசை நம்மை அக்காட்சிகளுக்குள்ளேயே அழைத்துச் செல்லும். அவரது இசை துன்பத்தில் உள்ளோரைக் கூட மகிழ்ச்சியில் துள்ள வைக்கும். தம் இசையால் விருதுகளில் சிறந்த ‘ஆஸ்கார்’ விருதைப் பரிசாக பெற்றார். அவரது கடின உழைப்பாலும், எளிமையான குணத்தாலும் வெற்றி பெற்ற அவரைச் சந்தித்து மென்மேலும் நற்பண்புகள் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

                                                     கு.சரவணன்

                                     ஒன்பதாம் வகுப்பு ‘இ’பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் “எம்.எஸ்.தோனி”. இவர் இந்தியாவின் முன்னாள் மட்டைப்பந்து அணித் தலைவர் ஆவார். இவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலையும் விளையாடும் ஆற்றலையும் வெளிக்காட்டியுள்ளார். எந்நிலையிலும் இவர் சிந்தித்தே செயல்படுவார். இவரிடம் உள்ள சிறப்பம்சம் கோபப்படாமல் செயல்படுதலே. நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். இவரைச் சந்திக்கும் போது நான் அவரைக் கேட்கும் முதல் கேள்வி – “கடினமான சூழ்நிலையிலும் கோபப்படாமல் இருப்பது எப்படி” என்று கேட்பேன். அதுமட்டுமல்லாமல் அவரின் தலைமைப் பண்பும் மிகச் சிறந்தது. 2008 ஆம் ஆண்டு தம் குழுவில் இளம் வயதினானவர்களை அவர் சேர்த்துக் கொண்டார். எனவே “தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதற்குச் சில நுணுக்கங்களையும் கேட்பேன்”. வாழ்க்கையில் இவ்வளவு புகழ்பெற்ற ஒரு மட்டைப்பந்து விளையாட்டு வீரராக ஆவதற்குப் பல பாடுபட்ட  அவரைச் சந்தித்து பண்புகள் பல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

                                                           D.ஜெ.குஷி

                                                ஒன்பதாம் வகுப்பு ‘இ’பிரிவு

 

நம் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரரான தோனியே நான் சந்திக்க விரும்பும் நபர். அவர் நிறைய போட்டிகளில் தலைவராக இருந்து அணியை வழி நடத்தியுள்ளார். மட்டைப்பந்து மட்டுமின்றி கால்பந்து விளையாட்டிலும் அவரது பங்கு உள்ளது. இவர் சமீபத்தில் விராட் கோலியைச் சிறந்த தலைவர் எனப் பாராட்டியுள்ளார். இவர் தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே மட்டைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் செலுத்தினார். தன் குடும்பத்தினர் படிப்பு தான் அவசியம் எனக் கூறியபோதும் அவர் விளையாட்டைக் கைவிடாமல் படித்துக் கொண்டே விளையாடினார். இவர் விக்கெட் கீப்பீங்கில் சிறந்தவர். இவர் இப்பொழுது சிறந்த மட்டைப்பந்து வீரராகவும் திகழ்கிறார். சி.எஸ்.கே அணித் தலைவராக இருந்தார். இவர் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக வெளியிட்டுள்ளனர். அத்திரைப்படத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட இன்பங்களையும் துன்பங்களையும் எடுத்துக் காட்டியுள்ளனர். எனக்கு அவரைச் சந்தித்தால் அவரிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? எனக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

                                                     இர. வைஷ்ணவி

                                               ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் உலகத்தில் மிகச் சிறந்தப் பாடகர் – ஜஸ்டின் பீய்பர். இவர் உலகத்தில் மிகச் சிறந்த பாடகராகத் திகழ்கிறார். இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பதின்மூன்றாம் வயதில் இவர் சில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இருப்பினும் இவருக்குப் பெரிதான அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதன்முதலில் இவரை யாரும் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. இவரது திறமையை வெளி உலகம் அறியவில்லை. இவரை அனைவரும் ஏளனப்படுத்தினர். ஆனால், இவர் தமது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தனக்கென  ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இதனால் இவரைப் பலர் ஆதரித்தனர். அதேசமயம் பலர் எதிர்க்கவும் செய்தனர். இதனால் இவர் பலமுறை மனமுடைந்தார். ஆனால் இவரது தாய் இவருக்கு உறுதுணையாகத் திகழ்ந்தார். பிறகு சில வருடங்களுக்குப் பிறகு இவரது புகழ் உலகம் முழுதும் பரவியது. இவர் பல விருதுகளுக்காக 216 முறை தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் பலருக்கும் பல உதவிகள் செய்துள்ளார். எனவே நான் இவரை எனது முன்மாதிரியாகக் கருதுகிறேன். இவரது பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கும். ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது கருத்துகள் அமைந்திருக்கும். எனவே இவரைச் சந்தித்து இவரின் சிந்தனைகளை உள்வாங்கி வளர எண்ணுகிறேன்.

                                                சி. பிரதீப்தா

                                ஒன்பதாம் வகுப்பு ‘இ’பிரிவு

நான் சந்திக்க விரும்பும் நபர் “டெய்லர் ஸ்விப்ட்”. தமது வாழ்வில் ஏற்பட்ட பல தடைகளையும் முறியடித்து மிகச் சிறந்த பாடலாசிரியராகத் திகழ்கிறார். பல தடைகளையும் தாண்டி உலகின் மிகப் பிரபலமான பாடல்களை எழுதி வருகிறார். அவரைப் போல நானும் என் வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இசையின் அழகைப் புரிந்து கொள்ளாமல் டெய்லரின் பாடல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களே இப்பொழுது டெய்லரின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.

 

ச. கோடீஸ்வரி

                                     ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

 

சச்சின் டெண்டுல்கர் தான் நான் சந்திக்க விரும்பும் நபர். அவர், நமது இந்திய அணிக்காகவும், மும்பை இந்தியன் அணிக்காகவும் விளையாடி பல வெற்றிகளைக் குவித்தவர். அவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றாலும் தன் தன்னம்பிக்கையை அவர் கைவிடவில்லை. அவர் பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து ஒரு நல்ல மட்டைப்பந்து வீரரானார். அவர் இந்தியளவில் அதிக சதங்களை அடித்தவர். மேலும் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். இவர் இவ்வளவு பெரிய நிலையில் இருந்தும் பணிவுடன் இருக்கிறார். இந்தப் பண்புதான் அவரை நான் சந்திக்கும் ஆசையைத் தூண்டியது, இப்பண்பே பலரின் மனதைக் கவர்ந்தது. இதனால் எனக்கு மட்டைப்பந்தின் மீது ஆர்வம் எழுந்தது. அவர் குழுத் தலைவராக வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு உறுப்பினராக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவர் “துன்பம் என்று வந்தால் நம்பிக்கையும் உதவாது தும்பிக்கையும் உதவாது தன்னம்பிக்கை மட்டுமே உதவும்” என்பதைச் செயலாற்றினார்.  அவர் தனது தோல்வியை வெற்றியின் முதற் படியாகக் கொண்டு வெற்றி நடைபோட்டவர். இக்காரணங்களால் நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். மேலும், அவரது வாழ்க்கையின் வெற்றியின் இரகசியத்தை அறிந்து நானும் அதைச் செயல்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்.

                                                பா.ஹரிணி

                                     ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் “மலாலா யூசுவ்சாய்”. அவர் பெண் கல்விக்காகப் போராடியவர். அவர் வாழ்ந்த ஊரில் பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது எனத் தடை விதித்திருந்தார்கள். ஆனால் மலாலா அதைப்பற்றிக் கவலைப்படாமல் பள்ளிக்குச் செல்வேன் என்று துணிச்சலாக நின்றாள். அவள் வீட்டிலும்  ஆண்களுக்கே அதிக உரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது எனப் போராடிக் கல்வி கற்க குரல் எழுப்பினார். அவர் தான் பெண் எனக் கருதாமல் ஆணும் பெண்ணும் சமம் என்றார். பெண்களுக்கும் ஆண்கள் போலவே கல்வி வேண்டும் என்றார். அவரை தாலீபன் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயற்சித்தனர். ஆனால் மலாலா துணிச்சலாக மீண்டு எழுந்தாள். மலாலாவின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் என்னைக் கவர்ந்தது. மலாலாவை நான் வழிகாட்டியாய்த் தேர்ந்தெடுத்தேன். எனவே அவரைச் சந்தித்து அவரிடம் உரையாடி மேலும் அவரின் கருத்துகளைக் கேட்டு அவரைப் போல தைரியமாக, தவறுகளுக்குக் குரல் எழுப்புவேன்.

மலாலா வாழ்க!!!

                                                     சூ. சாஹித்யா

 ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’பிரிவு

 

 

நான் சந்திக்க விரும்பும் நபர் எல்லோருக்கும் பிரபலமானவரான பில்கேட்ஸ் ஆவார். இவர் மைக்ரோசாப்ட்டைக் கண்டுபிடித்தவர். இவர் தமது வாழ்க்கையில் மிகவும் போராடியுள்ளார். இவர் வாழ்நாள் தோறும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். இவர் நிறைய தோல்விகளுக்குப் பிறகு வெற்றியைச் சந்தித்தார். இப்பொழுது உலகில் உள்ள கோடீசுவரர் பட்டியலில் இவர் பெயர் முதலிடம் பெற்றுள்ளது. இவரிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளன. என்னுடைய விருப்பம் இவரை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதுதான். இவரைச் சந்தித்து அவருடைய வெற்றிக்குப் பின்னால் உள்ள இரகசியத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவரே என் வாழ்க்கையின் வழிகாட்டியும் ஆவார்.

                                                     மு.நா.நிஷ்டா

                                           ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் விராட் கோலி. விராட் கோலி கிரிக்கெட்டின் இன்றைய ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார். கோலி தற்போது இந்தியாவின் சிறந்த மட்டைப்பந்து வீரராவார். விராட் கோலி தற்போது உலக அளவிலான ஐம்பது புள்ளிகள் கொண்ட போட்டியில் முதலிடத்தில் உள்ள மட்டைப்பந்து வீரரும் ஆவார். கோலி தற்போது அதிக சதங்கள் எடுத்தவர் பட்டியலில் ஆஸ்திரேலியா மட்டைப்பந்து வீரரான ரிக்கி பாண்டிங்கைப் பின் தள்ளி தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் சராசரியாக முப்பத்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார். மேலும், ஆறு இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். இவர், பந்தைத் தரையோடு அடித்து விளையாடுவதில் திறமையானவர். இவர்  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தற்போது உலகின் சிறப்பான மட்டைப்பந்து வீரர் என்று அழைக்கப்படுகிறார்.. நான் அவரைச் சந்தித்தால் அவரிடம் உள்ள  நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்வேன்.

                                                      கி.தருண் கிஸோர்

                                              ஒன்பதாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

நான் சந்திக்க விரும்பும் நபர் விராட்கோலி. இவர் இந்தியாவிற்காக ஆறு சதங்கள் தந்த விளையாட்டு வீரனாவார். இவருக்கு இந்தியாவின் சிறந்த குணச்சித்திரன் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. நான் இவரைச் சந்தித்து இவரது வெற்றியின் காரணத்தைக் கேட்பேன். நிறைய துன்பங்கள் அவரைக் கண்டிப்பாக வருத்தியிருக்கும். அவர் அதனை எல்லாம் தாண்டி எவ்வாறு விளையாட்டு வீரரானார் என்று கேட்டு நானும் எனது விருப்பமான துறையில் முன்னேற அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வேன்.

எவ்வாறு தம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேட்பேன். தன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரின் தன் சிறிய வயது ஆசை பற்றியும்  இந்திய அணியின் சிறந்த மட்டைப்பந்து வீரராகத் திகழ்வதற்கும் எடுத்த முயற்சிகள் யாவை? என்றும் கேட்பேன்.   இவர் எம்.எஷ் தோனியால் புகழப்பட்டதன் காரணத்தைக் கேட்டு நான் அவர் கூறுவனவற்றை என் வாழ்வில் ஏற்று முன்னேறுவேன்.

                                                           தி.சுகிதா

       ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

நான் சந்திக்க விரும்பும் நபர் விராட்கோலி, இவர் மிகச்சிறந்த மட்டைப் பந்து விளையாட்டு வீரர். எனக்கு இவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் மிகப்பெரிய வீரரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது சுலபமில்லை. அவர் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். அவரின் திறமையினால் அவர் இந்திய அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் கூட அவர் இரண்டு சதமடித்தார். அதனால் நிறைய இரண்டு சதமடித்த வீரர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆறு இரண்டு சதம் ஒர் டெஸ்ட் மேட்சில் அடித்துள்ளார். ஆதலால், நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தால் அவரிடம் எப்படி அவர் அந்நிலை வரை அதாவது நிறைய சாதனை படைத்த ஒர் வீரராகவும் அனைவராலும் மதிக்கக்கூடியவராகவும் விளங்குவதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

                                                   நா.கோகுல சுபஸ்ரீ

           ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

நான் சந்திக்க விரும்பும் நபர் நம் இந்திய மட்டைப்பந்து அணித் தலைவர் விராட் கோலி. நான் அவரைச் சந்தித்தபின் அவரிடம் முதலில் அவருடைய சிறிய வயது நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று கேட்பேன். அவர் ஏன் இந்த மட்டைப்பந்து விளையாட்டைத் தன் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். அவருடன் ஒருநாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கேட்பேன். என் தம்பிக்கு மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் நான் அவருடைய விளையாட்டுக் குறிப்புகளைக் கேட்டு, என் தம்பியிடமும் சக விளையாட்டுத் தோழர்களிடமும் பகிர்ந்து கொள்வேன். எந்தத் தவறுமின்றி மட்டைப்பந்து விளையாடக் கற்றுக் கொள்ளும் முறையைக் கேட்பேன்.

                                              சு.சுதிக்ஷா

                                      ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் ஒரு நபர் யார் என்றால் ப்ரதீப் நர்வால், தி துப்கி கிங்க்… அவர் கபடியில் எப்படி இவ்வளவு பெரிய விளையாட்டு வீரரானார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்… அவர் நிறைய சாதனைகளைப் படைத்துள்ளார். அவரைப் போலவே நானும் மிகப் பெரிய கபடி வீராங்கனை ஆகவில்லை என்றாலும் அவரைப் போல மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என நினைக்கிறேன். எனவே அதற்கான முயற்சிகள் செய்வது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்.

                                                     இ. ஷாலினி

                                                ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

 

‘கீதா குமாரி போகாட்’ – இந்திய மகளிர்களுள் முதன் முதலாக குத்துச் சண்டையில் தங்கம் பெற்றவர். அவரின் தன்னம்பிக்கையும், தந்தை மீது உள்ள மரியாதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அவரைப் போல் குத்துச் சண்டையிடக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. ஒரு பெண் நினைத்தால் அதைச் செய்து முடிப்பாள் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குபவர் ‘கீதா’. அவரின் கடினமான வீர வாழ்க்கையும், விடா முயற்சியும் தான் அவரது வெற்றிக்குக் காரணம். சிறிய வயதிலிருந்து ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்திரம், விளையாட்டுப் பொம்மைகள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அதற்காக அவர் வருந்தவில்லை. அதற்குப் பதிலாக இன்று அவருக்கு பொன், பொருள் சிறப்புப் பெயர் கிடைத்துள்ளன. இத்தகைய சிறப்பிற்குரிய வீராங்கனையைக்  கண்டு அவரைப் பற்றி நான் முழுமையாக அறிய உள்ளேன்.

                                                     பவக்ஞா

                                          ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

 

நான் சந்திக்க விரும்பும் நபர் டைகர் வுட்ஸ்.இவர் உலகிலேயே மிகச்சிறந்த கோல்ப் வீரர்.இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.  இவர் ஒரு வீரர் மட்டும் அல்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட. இவர் தம் இளம் வயதில் நிறைய கருத்து வாய்ந்த புத்தகங்களைப் படித்தார். இவருக்கு இளம் வயதிலேயே கோல்ப் மீது  ஈர்ப்பு ஏற்பட்டது. இவர் கோல்ப் மேல் கொண்ட மோகமே இவரது சாதனையாக மாறியது. சூரியன் போல் ஒளிர வேண்டுமானால், சூரியன் போல் எரிய வேண்டும் என்பதற்கேற்ப இவர் வாழ்ந்து வந்தார்.உலகில் அனைவரும் பிறந்து வாழ்ந்து இறக்கிறார்கள். இதில் எவர் ஒருவர் சிறப்பாக வாழ்கிறாரோ, அவரையே சரித்திரங்கள் பேசும். ஆகையால்தான் சரித்திரம் படைத்த இவரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.

 

எஸ்.சந்தோஷ் குமார்

      ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *