விதிகளைப் பின்பற்றுவதில் மாணவரின் பங்கு

நம் நாட்டின் விதிகள் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டவை.. அதனைப் பின்பற்றுவதே நமது கடமை ஆகும்.இன்றைய மாணவர்களான நாமே நாளைய தலைவர்கள் ஆவோம். அதனால் நாட்டுக்காக எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்.தெருவில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் பின்பற்ற வேண்டிய விதிகள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை பற்றிய விதிகள், சமூக வளர்ச்சிக்கு வித்திட அமைக்கப்பட்டவை. இவை எல்லாவற்றையும் மாணவர்களாகிய நாம் எங்குச் சென்றாலும் அங்கு விதிக்கப்பட்ட விதிகளை மறக்காமல் பின்பற்ற வேண்டியது அவசியம். அப்போதுதான் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

                                                     ப. மஞ்சுபிரியா

 பத்தாம் வகுப்பு ‘ஆ’  பிரிவு

நம் நாட்டில் குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்கும் பண்பாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும் விதிகளை விதிக்கின்றனர்.ஆனால் அவ்விதிகளைப் பின்பற்றுவது நம் கடமை என்று நினைப்பவரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இக்காலத்தில் யாரும் விதிகளைப் பின்பற்றுவதில்லை. அதனால் பல விபத்துகளும், குற்றங்களும், ஒழுங்கீனமான செயல்களும் நிகழ்கின்றன. சாலையில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுதல் வேண்டும் என்பது ஒரு எளிய விதி ஆனால் அதனையும் சோம்பலினாலும், அலட்சியத்தாலும் நாம் பின்பற்றத் தவறுகின்றோம். விதிகள் இருப்பதனாலே மனிதன் நேரத்திற்கு வேலைகளை செய்து முடிப்பதும், ஒழுக்கமாக நடந்து கொள்வதைக் காண இயலும்.ஆகையால் தான் மாணவர்கள் தங்கள் இளமைப் பருவத்திலேயே விதிகளைப் பின்பற்றி வாழ்தல் வேண்டும். ஏனெனில் அவர்களே வருங்காலக் குடிமக்கள், தலைவர்கள். எனவே பள்ளிப்பருவத்திலிருந்து விதிகளைப் பின்பற்றிக் கொண்டே வந்தால் அவர்களுக்கு மற்ற விதிகளைப் பின்பற்றுவதில் கடினம் இருக்காது. விதிகள் ஒருவனின் வாழ்க்கையைச் சிறப்பாக்குவதற்கே என்பதனை மாணவர்களும் உணர வேண்டும். அதற்காக அவர்கள் விதியைப் பின்பற்றினால் தான் வருங்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகவும் ஒழுக்கமுடைய நாடாகவும் திகழ முடியும்.

                                                           சீ. மதுமிதா

    பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

விதிகள் என்பது மனிதராகப் பிறந்த அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.ஒருவன் எங்கிருந்தாலும் நடந்து கொள்ளும் முறை என்று ஒன்று உள்ளது. அதற்காக ஒருவன் செய்ய வேண்டிய செயல்கள்  ஒழுங்குற அமைய விதிகள் வகுக்கப்படுகின்றன. எந்த இடத்தில் இருந்தாலும் அவன் விதிகளைப் பின்பற்றி நடத்தல் வேண்டும். சாலையில் இருந்தால் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். பள்ளிக்கூடத்தில் அங்கு கூறப்படுகின்ற  விதிகளைப் பின்பற்றி நடத்தல் வேண்டும். ஒருவன் விதிமுறைகளை பின்பற்றிப் பொறுப்பாக நடந்து கொண்டால்தான் அவன் நல்ல குடிமகனாகத் திகழ்வான். விதிகளைப் பின்பற்றுவதில் மாணவர்களுக்குப் பெரும்பங்குண்டு. பள்ளிக்கூடத்தில் வலியுறுத்தப்படும் ஒழுக்கம், மரியாதை, நேரம் தவறாமை, நட்பு, கலந்துரையாடல் என அனைத்திற்கும் வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றினால் தான் சிறந்த மாணவராக விளங்குவர். இதனை மாணவர் அனைவரும் நாடக வடிவிலோ, பல வழிகளிலோ பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதுவும் மாணவரின் பங்காகும்.

                                                           சுவாதி

பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

ஒரு மிகச்சிறந்த நல்ல நாட்டை உருவாக்க, அந்நாட்டு மக்கள் அங்கு வகுக்கப்பட்டுள்ள விதிகளை மதித்து நடக்க வேண்டும், அந்நாட்டு மக்கள் அவ்விதிகளைப் பின்பற்ற வேண்டுமானால் அதன் அவசியம் பற்றிய தெளிவு மாணவர்களாகிய நம்மால் மட்டுமே அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும். விதிகளைப் பின்பற்றுவதில் மாணவரின் பங்கு மகத்தானது. தலைக்கவசம் அணிதல், நெகிழிப் பொருட்களை விலக்குதல், கற்புநெறிக் கடைப்பிடித்தல், பசுமையான, மாசற்ற உலகை உருவாக்குவது என அனைத்தையும் பின்பற்றுவதில் மாணவர்களாகிய நாமே முன் உதாரணமாக  இருந்து காட்ட வேண்டும். இதுவே  நல்லதொரு சமுதாயத்திற்கான அடித்தளமாக அமையும். ஒரு நல்ல சமுதாயமே ஒரு நல்ல நாடாகும். உலக அளவில் நம் நாடு எனப் பெருமையாகப் போற்றப்பட வேண்டுமானால் மாணவர்களின் பங்கு மிகுந்து இருக்க வேண்டும்.

                                                           ஜனனி

பத்தாம் வகுப்பு ‘ஆ பிரிவு

விதிகள் என்பது நாட்டின் மக்களுக்கு மட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கும் உண்டு.மாணவர்களுக்கு இடப்படும் விதிகள் அவர்களின் மேன்மைக்காகவே என்பது அவர்களுக்கு புரியவில்லை.ஒரு விதியைப் பின்பற்ற வேண்டுமானால் அதன் அவசியம் உணர்ந்து செயல்பட  வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களின் வளர்ச்சிதான் பாதிக்கப்படும். அதனால், விதிகளைப் பின்பற்றும் மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் கருதிச் செயல்பட வேண்டும்..

                                                           குரு

                                        பத்தாம் வகுப்பு ‘இ’ பிரிவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *