தமிழின் சிறப்பு

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழியியலார். இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள் ஈராயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கொழிந்து போயின.

இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு, அதன் பழைமை மட்டும் போதா.அம்மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாறும் அவற்றோடு தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பலவகைகளிலும் சிறப்பைப் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்மொழிக்கு இவை அனைத்தும் பொருந்தும். எனவே நம் தமிழ்மொழியின் சிறப்பை அறிந்து அவற்றை உலகின் சிறந்த மொழியாக ஆக்குவோம்.

                                                        ஹரிப்ரியா

                                              பத்தாம் வகுப்பு-‘அ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *