“விடுதலை” என்ற சொல் தமிழகத்தில் ஒலிப்பதற்குப் பலர் பாடுபட்டனர். அவர்கள் போராடியதால் விடுதலை நாட்டிற்கு மட்டும் கிடைக்கவிலை, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த செயல்கள் அழிந்து போவதற்கும்தான் கிடைத்தது.விடுதலைக்குப் பின் தமிழகம் மகிழ்ச்சிப் பூங்காவாக மாறியது. பெண்களின் கல்வி வளர்ந்து, ஆண் பெண் இருவரும் சமம் என்ற நிலை உருவானது, தீண்டாமை என்னும் கொடுமை ஒழிந்து, மக்களாட்சி மலர்ந்து இன்று நாம் தமிழன் என்று பெருமையாகக் கூறும் நிலையும் உருவானது. பாரதியார், பாரதிதாசன், உத்தமர் காந்தி, நேரு போன்ற சான்றோரின் குரல் அனைவர் செவிகளிலும் எட்டியது.கல்வி, பொருளாதாரம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியே மேலோங்கியுள்ளது.
வி.காவ்யா
பத்தாம் வகுப்பு -‘ஆ’ பிரிவு
தமிழகம் விடுதலைப் பெற்றிருந்தாலும் இன்னும் தமிழர்கள் அடிமையாகவே உள்ளார்கள்.பள்ளிகளில் தமிழ் பேசினால் அது தவறு ஆங்கிலத்தில் பேசினால் அது பெருமை. தமிழ் பேசுவதற்குச் சுதந்திரம் இல்லை.இப்பொழுதும் தமிழ்நாட்டிலிருந்து பல பட்டதாரிகள் வேலை தேடிச் சென்று ஆங்கிலேயரிடம் கைக்கட்டி வேலை செய்கின்றனர். நம் தமிழ்க் கலாச்சாரத்தை எல்லாம் மறந்து விட்டு ஆங்கிலேய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டோம்.நம் நாட்டின் பெயர் மட்டும் தான் “தமிழ்நாடு”.ஆனால் தமிழ்நாடு இன்னும் சில நாளில் ஆங்கில நாடாக மாறிவிடுமளவிற்கு தமிழ் மொழி அழிந்து கொண்டிருக்கிறது. இனியும், தமிழ் மொழி தொன்மையானது என்று தமிழின் பெருமைகளைக் கூறியே காலம் கழிக்காமல் தமிழையும் தமிழ் நாட்டையும் போற்றிக் காத்திடுவோம்.
ஷ. முகமது அர்ஷத்
பத்தாம் வகுப்பு ‘இ’பிரிவு