நட்புக்குக் கை கொடு
நல்ல நட்புக்குக் கை கொடு
நல்ல நட்பே நாளை உனக்குக் கைகொடுக்கும்
நட்புக்குக் கை கொடு
நல்ல நட்புக்குக் கைகொடு
நல்ல நட்பே நன்மைகளைக் கற்றுத் தரும்.
நட்புக்குக் கை கொடு
நல்ல நட்புக்குக் கைகொடு
நல்ல நட்பே நல்ல பாதையில் வழிநடத்தும்.
நட்புக்குக் கைகொடு
நல்ல நட்புக்குக் கைகொடு
நாளை உலகை நட்புடன் வென்றிடு.
மு. தன்யா
ஆறாம் வகுப்பு ‘இ’ பிரிவு
நல்லவர்களின் அடையாளம்
நம்பியவர்களின் அதிகாரம்
மனித குலத்தின் மறுவேதம்
மாமனிதனின் விசுவாசம்
அன்னிய தேசத்திலும் நட்பின் வாசம் புரியும்
அனைத்துலகமும் நட்பினை நாடித் திரியும்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இது திருவள்ளுவரின் திருவாசகம்
நட்பே நமது உயிர்மூச்சு
அதுவே நமது நாட்டின் பெரும் பேச்சு
நட்பாக இருந்தால் நாடும் வீடும் பூஞ்சோலை
நமக்கெல்லாம் அது புரிந்தால் எதற்கு
வேண்டும் சிறைச்சாலை
கண்ணை இமை காப்பது போல்
நாமும் நட்பைக் காத்திடுவோம்
உலக நன்மை போற்றிடவே
உறக்கச் சொல்லி நட்பு விளக்கை ஏற்றிடுவோம்.
விஷாலினி மாரிமுத்து
ஆறாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு
நட்பு……
அது யாராலும் அழிக்க முடியாத பந்தம்…..
அது சுமையானது அல்ல சுகமானது.
நிகர் வைக்க முடியாத…..
நிராகரிக்கப் பட முடியாத……
நிலையான உறவு …..
நம் நட்பு.
நட்பு என்று வார்த்தையில்
சொல்வதால் வருவது அல்ல நட்பு….
உணர்வின் மூலம் வெளிப்படுகிறது பார்
அது தான் நட்பு.
அறிமுகமே இல்லாத உன்னிடம் இருந்து
கடன் வாங்கிய பேனா முதல் தொடங்கியது
நம் நட்பு…..
உன்னுடைய நட்பு
எனக்கு அலங்கரிக்கப்படாத
அழகிய உறவு
உன்னிடம் இருந்து
பெறப்பட்ட ஒவ்வொரு
பொருளும் ஒரு அற்புதங்களைச் சொல்லும்.
இரா.அசீமா ஃபரீன்
ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு
உன் வாழ்வுக்குக் கை கொடுக்கும்
உண்மையான நண்பனின் நட்பு
உணர்வின் வெளிப்பாடே நட்பு
கவலையில் ஆறுதல் அளிப்பது நட்பு
தவறைச் சுட்டிக் காட்டும் நட்பு
அன்புடன் பழகுவது உண்மையான நட்பு
ஐயம் தீர்த்து வைப்பது நட்பு
ஒற்றுமையுடன் வாழ வைப்பது நட்பு
உடலுக்கு ஔடதமாக விளங்குவது உண்மையான நட்பு
ஆதலினால் நட்புக்குக் கை கொடு
அது உன் வாழ்வுக்குக் கை கொடுக்கும்.
இரா . மெர்சி கோல்டினா
ஏழாம் வகுப்பு ‘அ’ பிரிவு
நட்பு மட்டும்தான் எதிர்பார்ப்பு இல்லாத உறவு
அது என்றும் நம் மனதில் இருக்கும்
நுண்ணிய உணர்வு
நட்பு மட்டுமே
சாதி, மதம் பார்க்காமல் வரும்
அதை நாம் போற்றிப் பாதுகாப்பது நலம்
நட்பு என்பது நம் வாழ்க்கையின்
“மூன்றாவது” கை
அது இருந்தால் நம்
வாழ்க்கையில் வரும் நம்பிக்கை
ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லை உண்டு
நட்புக்கு மட்டும்தான் எல்லை இல்லை.
உன் வாழ்க்கையில் உன்னைத்தவிர
மற்றொருவர் அக்கறை கொள்வாரெனில்
அது நண்பன் மட்டுமே
சுற்றம் உறவு எல்லாம் நீ வளமாக இருக்கும் வரை
நட்பு மட்டும்தான் நீ வளம் பலவும்
பெறவும் இருக்கும் ஆதலினால்
நட்புக்குக் கை கொடு
வி. கே . ஸ்ரீ செண்பக சக்தி
ஏழாம் வகுப்பு ‘இ’ பிரிவு
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு….
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட ஒரு நட்பு….
இளமைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு….
வாலிபப் பருவத்தில்
பேசி இரசிக்க ஒரு நட்பு….
முதிர்ந்த பின்
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு….
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு தேவை – ஆதலினால்
நட்புக்குக் கை கொடு
ஆ.ஸ்ரேயா
எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு
வசந்தத்தின் வாசலில் நம்மை
வரவேற்கும் புன்னகையாய் ஒரு பூ –
அது நட்பு
அகமும் முகமும் மலர
மணம் வீசும் நேசப்பூ – நட்பு
ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
சிந்திக்காமல் நொடியில் கரம் நீட்டும்
நம்பிக்கை நட்பு
காலத்தினால் மாற்றம் வரினும்
என்றும் இளமையாய் இருக்கும் நட்பு
நட்பினால் இணையும் அன்பு
என்னும் உறுதியான நட்பு
வானவில்லாய் நம் வாழ்வில் என்றும்
சுகந்தம் வீசும்
நட்புக்குக் கை கொடுப்போம்
கை கோத்து வென்றிடுவோம் உலகையே.
அப்சரா. ர
எட்டாம் வகுப்பு ‘இ’ பிரிவு
தடுமாறும்போது தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும்போது தட்டிக் கேட்பவனும்
உண்மையான நண்பன்.
நண்பனே!
நட்பை ஓவியமாக வரைய நினைத்தேன்…
ஆனால் முடியவில்லை – ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை வரைய முடியுமா?
தாய் கருவறையில் சுமந்தாள்
தந்தை தோளில் சுமந்தார்
நண்பா, உன் எண்ணங்களால்
நான் வளர நீ ஏணியானாய் – ஆகவே
நண்பர்களே! நட்புக்குக் கை கொடுப்போம்.
நா. கீர்த்தனா
எட்டாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு
இவ்வுலகில் இறைவன் படைத்ததில் மிகவும் புனிதமான அருமையான உறவு நட்பு…
நட்புகள் ஆயிரம் இருந்தாலும்
நட்பின் தேவை குறையவில்லை…..
தேவையின் போது தோள்களில் சாய
நட்பு வேண்டும்….
துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்….
மகிழ்ச்சியின் போது மனம் மகிழ
நட்பு வேண்டும்….
நானாக நானிருக்க நட்பே…
நீ எனக்கு,
நட்பாக வேண்டும்…
நண்பா!
நட்புக்காகக் கை கொடு
ஹ. மது காயத்ரி,
ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு
என் அருமை நண்பா!
உனை நினைக்கும் போது
ஒரு வகை சுகம்!
உனைப் பார்க்கும் போது
இன்னுமொரு சுகம்!
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் வந்தாய்
இந்த நிமிடம் வரை எந்தக்
குறையும் இல்லாமல்
அன்பைப் பொழிகிறாய்!
நட்பே உலகிலே உன்னதமானது
நாம் சுவாசிக்கும்
காற்று போல்
நம்மைச் சூழ்ந்திருக்கும்
முகம் பார்க்கும்
கண்ணாடி போல்
நாம் சிரித்தால் சிரிக்கும்
நாம் அழுதால் அழும்
அப்பழுக்கற்ற அன்பு கொண்டது – ஆகவே
நட்புக்குக் கை கொடு!!!
பி. சஞ்சனா
ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு
நண்பனே ………………………………
வாழ்க்கையில் நீ கிடைத்ததால் மகிழ்ச்சி
உன்னை நினைத்தாலோ மனதில் நெகிழ்ச்சி
நீ அருகில் இருந்தால் அண்டாது இகழ்ச்சி
நீ கற்றுத் தந்தாய் வாழ்க்கைச் சுழற்சி
எனை நீ புகழ்ந்தாய் வஞ்சப்புகழ்ச்சி
அதுவும் எனக்கு தரும் மகிழ்ச்சி
உன் நட்பு கிடைத்தது எனக்கு ஒரு வரம்
என் மனதில் அழிந்தது கவலை என்னும் பாரம்
உன் கரம் தந்தது எனக்கு வீரம்
என் மனதில் தோன்றியது தீரம்
நட்பு இருந்தால் வாழ்க்கை ஒரு சோலைவனம்
நட்பு இல்லையேல் அதுவே ஒரு பாலைவனம்
பா.ஹரிணி
பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு
நட்பு என்னும் வார்த்தையைக் கேட்டாலே
மகிழ்ச்சியாக இருக்கும்
நல்ல நட்பு கிடைத்தாலோ
நம் வாழ்வு சிறக்கும்.
எந்த உறவு உலகில் இருந்தாலும் – அது
நட்புக்கு ஈடாகுமோ?
நல்ல நண்பனைத் தேர்ந்தெடு – அதற்கு முன்
நீ ஒரு நல்ல நண்பனாக இரு!
எப்போது நீ சோர்ந்து போனாலும் கூடவே வருவான்
நிழல் போல் உன் நண்பன் நீ எங்கே சென்றாலும் – துணையாக
தவறு செய்யும் போது தோள் கொடுப்பவனா நண்பன்?
சுட்டிக்காட்டித் தட்டித் திருத்துபவனே
நல்ல நண்பன் – எனவே
தீ நட்பை விடு
நல்ல நட்புக்கு என்றும் கை கொடு
ஹ. சாய் வர்ஷா
பதினொன்றாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு