எனது அடையாளம்

உண்மைகள் பல அவற்றில் ஒரு உண்மைதான் அடையாளம். ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அடையாளம் அவர்களின் பண்பை உணர்த்தும். அஃது நன்றாகவும் இருக்கலாம், அல்லது தீமையாகவும் இருக்கலாம். அடையாளம் 98% அவர்களின் குணங்களையும் பண்பினையும் உணர்த்தும். ஆனால் எனது அடையாளம் உடல் அழகில் இல்லை. என் குணத்தில் தான் உள்ளது. அச்சம் தவிர்ப்பதுடன், உண்மையானவன் என்ற நற்பெயருடன் உலாவுவேன். அதன் மூலம்  நன்மைகள் செய்து மக்களின் மனதில் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வேன். என் அடையாளம் உண்மை மட்டுமே பேசும் என் குணமாகும்.

 

                                                  ச . முகுந்த் ராம்

                                    ஏழாம் வகுப்பு ‘அ’ பிரிவு

              என் ஆசிரியரின் அறிவுரையின்படி, நான் ஒரு  குழுவைச் சேர்த்து சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தூய்மையாகவும் பசுமையாகவும் வைக்க ஆரம்பித்தேன்.  நான் பதின்மூன்று மரக்கன்றுகள் நட்டு வளர வகை செய்தேன். என் செயல்களை அறிந்த சிலர் என்னை இயற்கை ஆர்வலர் என்று அழைக்கும் போது, எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டானதே! ஆகா… அதனை வார்த்தைகளால் கூற முடியாது.  என்னை என் பெயரை வைத்து அழைப்பதை விட என்னை அடையாளப்படுத்திய இயற்கை ஆர்வலர் என்று அழைப்பதனையே நான் மிகவும் விரும்புகிறேன்.  என் அடையாளம் எனக்கு மகிழ்ச்சியையும், வாய்ப்புகளையும், பாராட்டுகளையும் தந்திருக்கின்றன.  என் பன்னிரெண்டு வயதில் எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.  இதனையே என் வருங்கால அடையாளமாக என் பெயர் மட்டும் இருப்பதை விட, என் பெயரின் பின்னால் கோ. மிருதுளா ஐ.ஏ.எஸ் – இயற்கை ஆர்வலர் என்ற அடையாளங்களுடன் உலகத்தார்க்கு முன் நிற்பேன்.  அது கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.                                                                                                                                                                                                                                                                                                                  

                                                                கோ. மிருதுளா

                                                ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *