மண்ணுக்குள் புதைந்த மர்மங்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன் விக்கிரம சோழன்  கட்டிய ஒரு சிவன் கோயில் மீட்டெடுக்கப்பட்டது.  தனுஷ்கோடி என்னும் ஊரிலுள்ள கோயில் மண்ணுக்குள் ஆழிப்பேரலையால் மூழ்கிவிட்டது.  இன்னும் ஒரு சில இடங்களில் கடல் நாள்தோறும் உள்வாங்கி ஒரு கோயில் இருந்ததை  நாம் இக்காலத்தில் அறிகிறோம்.  இவையெல்லாம் இயற்கையின் செயலே ஆனால் இன்று நாம் நாள்தோறும் பயன்படுத்தும் நெகிழி எப்படி மண்ணுக்குள் புதைந்து மர்மமாகிறது என்பதை யாராவது அறிகிறீர்களா?  நாம் நாள் தோறும் பயன்படுத்தும் பை, சாம்பூ பாக்கெட், சிப்ஸ் பாக்கெட், எல்லாமே மண்ணுக்குள் இருக்கின்றன.  இது செடி கொடி போல் சில நாட்களில் மக்கிவிடாது நம் அடுத்த தலைமுறை வரை மட்காத குப்பையாகவே இருக்கும்.  இவை இருக்கும் பகுதியில் நீர்வளமும் மண்வளமும் குறையக் கூடும்.  அதனால் ஐந்தறிவு இனம் முதலில் பாதிக்கப்படும்.  பின்னர் மனிதர்களும் பாதிக்கப்படுவர்.  மனிதர்களுக்குப் புதிய புதிய நோய்கள் வரக்கூடும்.  அவை இன்றிலிருந்து இந்த மண்ணுக்குள் புதைந்த மர்மங்களில் ஒன்றாகி நம் வாழ்வாதாரத்தையே அழிக்கத் துவங்கும்.  அதனால் மனிதர்களாகிய நாம் நெகிழிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். இனி வரும் நாட்களில் நம் நாட்டின் மக்களைப் பாதுகாப்பதுடன்  வரலாற்றுச் சின்னங்களையே உலகிற்குக் காட்ட வேண்டுமே தவிர  நெகிழிப் பொருள்களை எடுக்க வேண்டிய நிலைமை வரக்கூடாது. அதனால் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து நம் நாட்டைக் காப்போம்.

                                                        

                                                               . ஏழிசைவாணி

                                                  ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு

             உலகில் நடக்கும் சில நிகழ்வுகள் நமக்குப் புரியாத புதிராக இருந்தாலும் அந்த புதிருக்கான விடையைத் தேடி இன்று வரை சென்று கொண்டிருக்கிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிக சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஸ் சந்திர போஸ் இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு எவருமில்லை. போஸ் விமான விபத்தில் இறந்து போனார்என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர், உருசியாவிற்குத் தப்பிச் சென்று விட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, போஸ், விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு விசாரணைக் குழுவும் ஒவ்வொரு விதமான முடிவை முன் வைக்கின்றன. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர் மட்டுமன்று; புலப்படாத மர்மமும் கூட. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சுபாஸ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட மர்மமாகும்.

                                                                                                                 சு.அபர்ணா

                                                                                                                                                                   பதினொன்றாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *