இருள் சூழ்ந்த கருவறையிலே
இருந்த நீயும் நடையிடவே
வந்தாய் இப்புவிதனிலே!
விரல் பிடித்தே தந்தையின்
கைக் கொண்டு
பதம் பதித்தாய் நீயும்
பாடசாலையிலே வந்து
நடையிட்டு!
ஆசான் ஏற்றிடும் ஏணியிலே
ஏறியே நீயும் தொட்டிடுவாய்
முகிலுடன் விளையாடும்
விண்ணையே!
விண்ணையே தொட்டிட்டாலும்
கற்றதைக் கைக்கொண்டு
கேடுற்ற சமூகத்தைத்
திருத்தியே நீயும் நடையிடு உறுதியோடு!
வாழ்த்தையும் வைதலையும்
எள்ளலையும் ஏசலையும்
சமமெனவே கொண்டு
வாகை சூடிடுவாய் மௌனமாகவே!
ஆன்றோர் வாழ்த்திட
வையகம் போற்றிட
படைத்திடு புது உலகை
இனி ஒரு விதி செய்வோம் என்ற
பாரதி வழியிலே!
த. செல்வராணி
தமிழாசிரியை
என். எஸ். என். நினைவு மேல்நிலைப் பள்ளி