இயற்கை உணவு: இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும்
உணவான பழம், கீரை,காய்களையே இயற்கை உணவு என்கிறோம்.
இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல்அப்படியே உண்ண வேண்டும்.
நாம் உணவைச் சமைத்தால் அதன் சத்துகள் அழிந்து விடும்.நாம் இறந்த
உணவையே (புலால்உணவு) சத்துகள் என்று நினைத்து உண்கிறோம்.அதனால் தான்
மனிதன் நோயாளியாகிறான்.நம் அன்றாட வாழ்வில் இயற்கை உணவையே
உண்டால் நாம் நோயின்றி இந்த உலகில் நன்றாக வாழலாம்.
துரித உணவு:
இன்று உலகம் முழுவதும் நாவிற்கு அடிமையாகி துரித உணவை அறிமுகப்படுத்தி நம்மக்களை அடிமைகளாக்கி வருகிறது. இந்த துரித உணவுகளில் நாவிற்குச் சுவையூட்டும் இரசாயன உப்புகள் சேர்ப்பதால் சுவை கூடுமே தவிர உடலுக்கு நலம் பயப்பதில்லை.இதனால், உடலுக்குத் தீங்குதான் விளையும்.எனவே, துரித உணவைத் தவிர்ப்போம்; இயற்கை உணவை உண்டு நலமுடன் வாழ்வோம்.
கா.துவாரகேஷ்
பத்தாம்வகுப்பு‘ அ’பிரிவு
இயற்கைஉணவு என்பது நம் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்துச் செய்யப்படும் உணவாகும. இது நம் உடலுக்கு நன்மை தரும்.நம்மை நோய்வாய்ப்படுவதிலிருந்து தடுக்கும்.நம் எடை அதிகரித்திருந்தால் குறைப்பதற்கும் எடுத்துக்கொள்ளலாம்.
துரிதஉணவு என்பது செயற்கைப் பொருட்களால் செய்யப்படும் உணவாகும்.அது, உடலுக்குத் தீமைதரும்.அவ்வகையான உணவில் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயும் அதிகளவில் சேர்க்கப்படுவதால் முகப்பருக்கள் வரும் வாய்ப்புமுண்டு.எனவே,எதனை உண்ண வேண்டும் என்ற முடிவு உமதே!
நா.கீர்த்திகா
ஒன்பதாம்வகுப்பு‘ அ’பிரிவு
நாம் அனைவரும் 21 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துவருகிறோம்.நமது பழக்கவழக்கங்களும் கலாச்சாரங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.பலவகையான உணவு வகைகள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.அவற்றில் சில உடலுக்கு நன்மை தருகின்றன. பலதீமை தருகின்றன.இயற்கை உணவுகளான கம்பு, தினை, கேழ்வரகு போன்றவை ஏராளம் உள்ளன.துரித உணவுகளான பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை தீமை தருவனவாகும்.இவைகளில் சுவை மட்டுமே இருக்கும்.அதனால் சத்து நிறைந்த இயற்கை உணவை உண்போம்; நோயற்றவாழ்வு வாழ்வோம்.
ஜெயவர்ஷ்னி
ஒன்பதாம்வகுப்பு “’இ;பிரிவு