மனிதர்களாகிய நாம் ஆரம்ப காலத்தில் விலங்குகளுடன் இணைந்து வாழ்ந்தோம்.சிறிது சிறிதாகக் காலம்கடந்திட நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற்றம் அடைந்தோம்.இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்த நம்நாட்டில் பலவசதிகள் இருப்பினும் நம்மிடையே ஒற்றுமை இல்லை.மிருகங்களுடன் வாழ்ந்த நாம் இன்று மிருகங்களாகவே மாறிவிட்டோம். இனத்தாலும் மதத்தாலும் பிரிந்து நம்மிடையே பகையை வளர்த்து விட்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டே வருகின்றோம். பிற உயிர்களுக்கு இன்றுமதிப்பேயில்லாமல் போய்விட்டது.பணம் இல்லையெனில் குப்பைக்குச்சமமாக எண்ணப்படுகின்றனர்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நாம் இன்று அதனை அழித்து வாழ்ந்து வருகின்றோம்.நாம் நம் தவறுகளை என்று உணர்கிறோமோ அன்று தான் நாம் மனிதர்களாகக் கருதப்படுவோம்.இல்லையெனில் மக்களாகிய நாம் மாக்களாகவே கருதப்படுவோம். நம்முடைய அழிவிற்கு நாமே காரணமாகிவிடுவோம்.எனவே, நாம் பிறரிடம் அன்பையும் மனிதநேயத்தையும் வளர்த்ததுடன் மட்டுமல்லாமல் அதனைத்தொடர்ந்திட வேண்டும்.
ஆ.ஸ்ரேயா
ஒன்பதாம் வகுப்பு ‘அ’ பிரிவு
கல்வி வாழ்வின் அடிப்படை என்று அனைவரும் நம்பும் இக்காலத்தில் நற்குணங்களும் அடிப்படை என்பதனை பலர் அறிவதில்லை.மனிதர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகுதியே அவர்களின் மனிதநேயம்தான்.அதன்படி பார்த்தால், உலகின் மக்கட்தொகை பாதியாகக்குறைந்துவிடும்.சாதாரண ஆசிரியராக இருந்த அன்னைதெரேசா அவ்வாறு ஆவதற்குக்காரணம் (அன்னைதெரேசாவாகஆவதற்கு) அவரது மனிதநேயம் தான்.மனிதனாகப்பிறந்து மனிதநேயம் இல்லையெனில் அவர்வாழ்விற்கே அர்த்தமில்லை.ஆறாவது குணமான பகுத்தறிலே (மனம்) மனிதநேயத்தின்வேர்.அனைவரிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் பழகுதல் நம்மை மனிதர் என்று காட்டுவதற்கான அடையாளம்.ஒரு சமூகத்தில் எல்லோருடனும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் மனிதநேயம் அவசியம். நீதிக்காகவும் அறத்திற்காகவும் ஐந்தறிவு உயிரின் நேயம் உணர்ந்து தன் சொந்த மகன் மீதே தேர் ஏற்றிய தமிழர் குலத்தில் தோன்றிய நாம் இனிவரும் காலங்களிலும் மனிதநேயம் தொடர்ந்திட வழி செய்ய வேண்டும்.
இர.அப்சரா
ஒன்பதாம்வகுப்பு ‘ஆ’ பிரிவு