I see they are very happy. I think it is a good family. I wonder why they are taking a group photo! THANANYA. R I B I see a family. I think they are in the park. I Read More …
Author: NSN Memorial
பள்ளிப்பருவம்
அம்மாவைத் தாண்டிய ஓர் உலகினைக் கண்டிட ஆசை ஆசையாய்ப் புத்தகம் சுமந்து இதமாய்த் தோழமையின் Read More …
அம்மா… நீயும்.. நானும்…
கருங்கல்லை எடுத்து கவின்மிகு சிலையாக்கி அலங்காரப் பொருளாக்க அத்துணை ஆசைப்பட்டாய்! சின்னச் சின்னச் செதுக்கல்களால் செதுக்கி எனைச் சிங்காரச் சிலையாக்கிட மங்காத ஆர்வம் கொண்டாய்! நான் சிலையாக, நீ சிற்பியானாய்! புதுப்புது வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து வடிவமைத்து கவியாக எனைப் புனைய கடுந்தவம் நீ மேற்கொண்டாய்! நான் கவியாக, நீ கவியானாய்! வண்ணங்களைக் குழைந்தெடுத்து ஓவியமாய்த் Read More …
வானமே எல்லை
கலாம் கண்ட கனவு நாயகனே – உன் கனவை நனவாக்கும் நேரமிது நாளை உன்னை இந்த நாடு படிக்க இன்று நீ உருவாக்கும் பேஸ்புக் பதிவுகளை வாட்ஸ் ஆப் வர்ணஜாலத்தை இணையதள ஆதிக்கத்தைப் புறந் தள்ளு உன் சிந்தனையை வசப்படுத்து வானமே எல்லைதான் உனக்கு! ர.லதா நூலக ஆசிரியை
நேசி
காற்றை நேசி நின்னைத் தாலாட்டும் வெய்யோனை நேசி விடியலைத் தந்திடும் மழையை நேசி மனதை ஆராதிக்கும் நெருப்பை நேசி பகையை மறக்க ஆணையிடும் விண்ணை நேசி உயரப் பறக்க அழைக்கும் பூமியை நேசி பொறுமையை உணர்த்திடும் இயற்கையை நேசி இன்பம் தந்திடும் மனிதனை நேசி நேயம் மலர்ந்திடும் த. செல்வராணி தமிழாசிரியை என்.எஸ்.என்.நினைவுப் பள்ளி Read More …
வயதுக்கு மீறிய சாகசங்களினால் ஏற்படும் விளைவுகள்
நம் நண்பர்கள் மற்றும் மற்றவர்கள் பாராட்டுவதற்கும் வியப்பதற்கும் வயதுக்கு மீறிய சாகசங்கள் செய்து பலன் இல்லை. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் தாம் தனிப்பெயர் பெறுவதற்குத் தான்.ஆனால், அந்தச் செயல்கள் செய்யும் பொழுது நம் பெற்றோர் நம் மேல் வைத்திருக்கும் அக்கறையையும், அன்பையும் மனதில் ஒரு முறை நினைக்க வேண்டும்.வயதுக்கு மீறிய சாகசங்கள் அதாவது Read More …
விடுதலைக்குப் பின் தமிழகம்
“விடுதலை” என்ற சொல் தமிழகத்தில் ஒலிப்பதற்குப் பலர் பாடுபட்டனர். அவர்கள் போராடியதால் விடுதலை நாட்டிற்கு மட்டும் கிடைக்கவிலை, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த செயல்கள் அழிந்து போவதற்கும்தான் கிடைத்தது.விடுதலைக்குப் பின் தமிழகம் மகிழ்ச்சிப் பூங்காவாக மாறியது. பெண்களின் கல்வி வளர்ந்து, ஆண் பெண் இருவரும் சமம் என்ற நிலை உருவானது, தீண்டாமை என்னும் கொடுமை Read More …
தன்னம்பிக்கை
உலகிலேயே மிகவும் அற்புதமான,நம்ப முடியாத சாதனை செய்பவர்கள் யாரெனில் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களே அருஞ்சாதனை புரிந்த தாமஸ் ஆல்வா எடிசன், ஹெலன் கெல்லர், பீத்தோவன், மைக்கேல்பாரடே, ஜான்சன் முதலானோர் தன்னம்பிக்கையோடு வாழ்ந்த மாற்றுதிறனாளியரே.தன்னம்பிக்கை ஒன்றனையே இவர்கள் தம் வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டார்கள்; வெற்றி கண்டார்கள். நான்கு வயதில் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால், இனி நடக்கவே Read More …
அம்மா
இரு கைகள் போதாது உன்னை வணங்கிட ஒரு ஜென்மம் போதாது உனக்குச் சேவை செய்திட இரு கண்கள் போதாது உன்னை இரசித்திட ஓர் உலகம் போதாது உனக்கு வழங்கிட இரு செவிகள் போதாது உன்குரல் இரசித்திட ஓர் இதயம் போதாது உனக்காகத் துடித்திட. ஜானகி ராமன் பத்தாம் வகுப்பு-அ பிரிவு Read More …
கடல் கடக்கும் பயணம்
வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கும் பயண அனுபவம் மனிதர்களுக்குள் வேறுபடும். வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் படகே நாம் பயிலும் கல்வியாகும். கடலில் நம்மை அழிக்கும் திமிங்கலமும் இருக்கலாம், இன்பம் தரும் கடல் ஓசையும் இருக்கலாம். அதனைப் போல் நம் வாழ்க்கையிலும் நன்மை செய்யும் மனிதர்களும் இருக்கலாம். தீமை செய்யும் நண்பர்களும் இருக்கலாம். இதனை Read More …