இளமைப்பருவத்துடன் துடிப்புள்ளதும் எதையும் சாதிக்க வல்லது மானது வளரும் மாணவப்பருவமாகும்.இப்பருவமே மானிட வாழ்க்கையில் முக்கியமான பருவமாகக் கருதப்படுகிறது.இப்பருவத்தைச் சீராக அமைத்துக்கொண்டால் எதிர்காலவாழ்வு வளமாகும்.‘விளையும்பயிர்முளையிலேதெரியும்.’‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற கூற்றுகளுக்கு ஏற்ப இப்பருவத்தில் நாம் எதை விதைக்கின்றோமோ அதுவே பின்னாளில் நமக்குக்கதிராய்க் கிடைக்கும். அவை நல்ல குணங்களாக இருந்தாலும் சரி,தீயகுணங்களாக இருந்தாலும் சரி அதற்கேற்ற பலனை Read More …
Author: NSN Memorial
அன்பு காட்டுங்கள்
அன்பு காட்டுங்கள் – அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் அறிவு, அழகு, வயது, தகுதி கடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அச்சம் நீக்கும்; சினம் தவிர்க்கும்; நட்பு பலப்படும்; உறவு மேம்படும்; அகந்தை அகலும்; அகம் சிறக்கும்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் மதம், மொழி, இனம், நாடுகடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் போரைத் தவிர்க்கும் பொறாமை நீங்கும்; Read More …
நேசி–யோசி
காதோரம் கதை கூறிடும் தென்றலை நேசி உலகை உய்வித்து ஒளிர்ந்திடும் வெய்யோனை நேசி தேய்ந்தாலும் வானில் சுழன்று கவியாய் உலவிடும் நிலவை நேசி வடிவமது மாறினாலும் கடிதே சென்றிடும் கொண்டலை நேசி எட்டிப்பிடிக்கும் தூரமே வாவென நவின்றிடும் விண்ணை நேசி கால்தொட்டு முத்தமிடும் கடலலையை நேசி என்னோடு ஆடவா வென்றழைக்கும் மழையை நேசி வாழ்க்கையில் வளைந்து Read More …
மனிதநேயம் தொடர்ந்திட
மனிதர்களாகிய நாம் ஆரம்ப காலத்தில் விலங்குகளுடன் இணைந்து வாழ்ந்தோம்.சிறிது சிறிதாகக் காலம்கடந்திட நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற்றம் அடைந்தோம்.இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்த நம்நாட்டில் பலவசதிகள் இருப்பினும் நம்மிடையே ஒற்றுமை இல்லை.மிருகங்களுடன் வாழ்ந்த நாம் இன்று மிருகங்களாகவே மாறிவிட்டோம். இனத்தாலும் மதத்தாலும் பிரிந்து நம்மிடையே பகையை வளர்த்து விட்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டே வருகின்றோம். பிற Read More …
எண்ணங்கள்
உன் எண்ணம் உன் முகத்தில் தெரியும் உன் தகுதியைக்காட்டும்; உன் எண்ணம் உன்னைப்பழிக்கும் – சில நேரம் உன் எண்ணம் உன்னை ஆசிர்வதிக்கும்; உன் எண்ணத்தால் நீசாதிப்பாய்; – எதுவாயினும் உன் எண்ணமே உன்னைப் பிரதிபலிக்கும் மோனாஸ்ரீ ஒன்பதாம்வகுப்பு ‘ஈ’ பிரிவு என் வாழ்க்கையை உணர்த்தும் எண்ணங்களே! உனக்கு நன்றியுரைக்க வார்த்தைகளில்லை; எண்ணம் என்னும் Read More …
உயிர் காக்கும் ஊர்தி
நம் அனைவருக்கும் உயிர்காக்கும் ஊர்தி அவசரத்திற்கு மிகவும் உதவும்.ஒரு வேளை நமக்கு உதவவில்லை எனினும் ஆபத்திலிருப்போருக்கு நாம் அதனைவரவழைத்து அனுப்புவதனால் அவர் பயன் பெறுவர்.அவ்வுதவி நமக்குச்சாதரணமாக இருந்தாலும் காயமடைந்தவருக்கு அது ஆறுதலளிக்கும்.ஓர் அழைப்புவிடுத்தால் போதும்; ஓர் உயிரைக்காக்கும் பாக்கியம் பெறலாம்.இதனை நமக்கு அறிமுகம் செய்த அரசாங்கத்திற்கு எனது நன்றிகள் பல. 108 என்ற எண்ணிற்கு எவ்வளவு Read More …
இயற்கைஉணவு/ துரிதஉணவு
இயற்கை உணவு: இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவான பழம், கீரை,காய்களையே இயற்கை உணவு என்கிறோம். இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல்அப்படியே உண்ண வேண்டும். நாம் உணவைச் சமைத்தால் அதன் சத்துகள் அழிந்து விடும்.நாம் இறந்த உணவையே (புலால்உணவு) சத்துகள் என்று நினைத்து உண்கிறோம்.அதனால் தான் மனிதன் நோயாளியாகிறான்.நம் அன்றாட வாழ்வில் இயற்கை Read More …
நேரம்
கண் போன்ற காலமே! பொன் போன்ற நேரமே! உன்னை வீணடித்தால் ஏற்படும் சோகமே! வெற்றிக்கு நீதான் முக்கியமே! சாதனையாளர்களை உருவாக்கிய அதிசயமே! நீ போனால் திரும்பி வருவதில்லை – இதையறிந்தும் நின்னை வீணடிக்கும் மனம் இப்புவியில் சாதிப்பதில்லை! வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பாயே! உன்னைச் சேமித்தால் வெற்றிக்கு வழிவகுப்பாயே! மரகதமே! மாணிக்கமே! வையகமே! மனிதன் மதிக்கவேண்டியபொக்கிஷமே! உன்னைச் Read More …
நான் விரும்பும் மாயதேசம்
நான் விரும்பும் மாயதேசம் எனக்குக் காட்டுப்பகுதியைச் சார்ந்து இருக்க வேண்டும். அது ஒருமிகப் பெரியதேசமாக இருக்கவேண்டும்.அதில் எனக்கு ஒரு பெரிய வீடு வேண்டும். அது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அதன் வெளியே நிறைய மரங்கள் இருக்கவேண்டும். அந்தமரங்களில் எல்லாப்பழங்களும் பழுத்து இருக்க வேண்டும். அந்தவீட்டில் எல்லா இனிப்பு வகையும் இருக்கவேண்டும். அங்கு Read More …
சவால்களைஎதிர்கொள்ள
நம் வாழ்க்கை எப்பொழுதும் சுலபம் கிடையாது. சவால் நிறைய இருக்கும் அதை எதிர்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.அதை எதிர்கொள்ள நமக்கு தைரியம் வேண்டும்.அதை எதிர்கொண்டு நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும்இதுவேஎன்கருத்தாகும் எஸ். சிவப்பிரியா, ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு, நான் ஒருநாள் என் அம்மாவிடம் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெறுவேன் என்று சத்தியம் செய்தேன்.அதில் நான் பரிசுபெற்றேன்.அடுத்து நான் Read More …