நேசி

காற்றை நேசி நின்னைத் தாலாட்டும் வெய்யோனை நேசி விடியலைத் தந்திடும் மழையை நேசி மனதை ஆராதிக்கும் நெருப்பை நேசி பகையை மறக்க ஆணையிடும் விண்ணை நேசி உயரப் பறக்க அழைக்கும் பூமியை நேசி பொறுமையை உணர்த்திடும் இயற்கையை நேசி இன்பம் தந்திடும் மனிதனை நேசி நேயம் மலர்ந்திடும் த. செல்வராணி தமிழாசிரியை என்.எஸ்.என்.நினைவுப் பள்ளி   Read More …

வயதுக்கு மீறிய சாகசங்களினால் ஏற்படும் விளைவுகள்

  நம் நண்பர்கள் மற்றும் மற்றவர்கள் பாராட்டுவதற்கும் வியப்பதற்கும் வயதுக்கு மீறிய சாகசங்கள் செய்து பலன் இல்லை. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் தாம் தனிப்பெயர் பெறுவதற்குத் தான்.ஆனால், அந்தச் செயல்கள் செய்யும் பொழுது நம் பெற்றோர் நம் மேல் வைத்திருக்கும் அக்கறையையும், அன்பையும் மனதில் ஒரு முறை நினைக்க வேண்டும்.வயதுக்கு மீறிய சாகசங்கள் அதாவது Read More …

விடுதலைக்குப் பின் தமிழகம்

  “விடுதலை” என்ற சொல் தமிழகத்தில் ஒலிப்பதற்குப் பலர் பாடுபட்டனர். அவர்கள் போராடியதால் விடுதலை நாட்டிற்கு மட்டும் கிடைக்கவிலை, நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த செயல்கள் அழிந்து போவதற்கும்தான் கிடைத்தது.விடுதலைக்குப் பின் தமிழகம் மகிழ்ச்சிப் பூங்காவாக மாறியது. பெண்களின் கல்வி வளர்ந்து, ஆண் பெண் இருவரும் சமம் என்ற நிலை உருவானது, தீண்டாமை என்னும் கொடுமை Read More …

தன்னம்பிக்கை

  உலகிலேயே மிகவும் அற்புதமான,நம்ப முடியாத சாதனை செய்பவர்கள்   யாரெனில் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களே அருஞ்சாதனை புரிந்த தாமஸ் ஆல்வா எடிசன், ஹெலன் கெல்லர், பீத்தோவன், மைக்கேல்பாரடே, ஜான்சன் முதலானோர் தன்னம்பிக்கையோடு வாழ்ந்த மாற்றுதிறனாளியரே.தன்னம்பிக்கை ஒன்றனையே இவர்கள் தம் வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டார்கள்; வெற்றி கண்டார்கள். நான்கு வயதில் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால், இனி நடக்கவே Read More …

அம்மா

  இரு கைகள் போதாது உன்னை வணங்கிட ஒரு ஜென்மம் போதாது உனக்குச் சேவை செய்திட இரு கண்கள் போதாது உன்னை இரசித்திட ஓர் உலகம் போதாது உனக்கு வழங்கிட இரு செவிகள் போதாது உன்குரல் இரசித்திட ஓர் இதயம் போதாது உனக்காகத் துடித்திட.                                                         ஜானகி ராமன்                                                   பத்தாம் வகுப்பு-அ பிரிவு   Read More …

கடல் கடக்கும் பயணம்

வாழ்க்கை என்னும் கடலைக் கடக்கும் பயண அனுபவம் மனிதர்களுக்குள் வேறுபடும். வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் படகே நாம் பயிலும் கல்வியாகும். கடலில் நம்மை அழிக்கும் திமிங்கலமும் இருக்கலாம், இன்பம் தரும் கடல் ஓசையும் இருக்கலாம். அதனைப் போல் நம் வாழ்க்கையிலும் நன்மை செய்யும் மனிதர்களும் இருக்கலாம். தீமை செய்யும் நண்பர்களும் இருக்கலாம். இதனை Read More …

இசையும் பாடலும்

காலம் காலமாக பலவகையான இசைகளைக் கேட்டும் பாடியும் வாழ்ந்து வருகிறோம். ஒரு பாடலில் இசை நன்றாக இருந்து, சொற்கள் நன்றாக இல்லையெனில் அப்பாடலே முழுமை பெறாது. சொற்கள் நன்கு அமைந்து இசை சரியில்லை என்றாலும் பாடல் நன்றாக இருக்காது. பாடலின் அடிகளில் உவமை அதிகமாக அமையலாம். சில நேரம் எளிமையானதாகவும் அமையலாம். ஒரு சில அடிகள் Read More …

தமிழின் சிறப்பு

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழியியலார். இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம். இவற்றுள் ஈராயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மை மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கொழிந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று. ஒரு Read More …

விதிகளைப் பின்பற்றுவதில் மாணவரின் பங்கு

நம் நாட்டின் விதிகள் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டவை.. அதனைப் பின்பற்றுவதே நமது கடமை ஆகும்.இன்றைய மாணவர்களான நாமே நாளைய தலைவர்கள் ஆவோம். அதனால் நாட்டுக்காக எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்.தெருவில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் பின்பற்ற வேண்டிய விதிகள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை பற்றிய விதிகள், சமூக வளர்ச்சிக்கு வித்திட அமைக்கப்பட்டவை. இவை எல்லாவற்றையும் Read More …

ஆபத்தான இணைய விளையாட்டுகள்

  க்லாஷ், க்லேன் மற்றும் நீலத்திமிங்கலம் ஆகியன மிகவும் ஆபத்தான இணைய விளையாட்டுகள் ஆகும். நீலத்திமிங்கலம் மூலம்  பல பேர் இறந்திருக்கின்றனர். இந்த விளையாட்டை இணையத்தில் மட்டுமே விளையாட இயலும். நீலத்திமிங்கலம் மட்டுமல்ல அனைத்து இணைய விளையாட்டுகளும் ஆபத்தானவை. அதிக நேரம் விளையாடினால் அது நம்முடைய கண்களையும், மூளையையும் பாதிக்கும். எந்த இணைய விளையாட்டுகளாக இருந்தாலும் Read More …