அம்மாஎன்றசொல்லிற்கு அர்த்தம்தந்தவள்நீ நீஎன்னைமுதன்முதலாகஅம்மாஎன்று அழைத்ததருணமதுஇன்னும் என்உணர்வுகளில்நீந்துகிறது. என்மகிழ்ச்சியானதருணங்களில்என்னுடன் கைகோர்த்துநின்றாய்! என்துன்பநாட்களில்எனக்குத்தூணானாய்! நல்வழிகாட்டியுமானாய் உன்னுடன்பயணித்தநாட்கள் என்வாழ்வின்பொன்னானநாட்கள் எல்லாம்முடிந்ததுஎன்றநிலையில் என்வாழ்நாளைமீட்டுத்தந்தவள்நீ! எனக்குநீவந்ததுஒருவரம் என்னைமனிதநேயமுள்ளஅன்பானதொரு பெண்ணாகமாற்றியதில்இன்பமே! நீதான்என்உணர்வு நீதான்என்உயிர் என்தந்தையும்நீயே! என்தோழியும்நீயே! என்றென்றும்நான்மகிழ்வுடன்பணியாற்றிட சாதனைகள்பலபடைத்திட வாழ்த்திடுவாய்! ரெ . இலதா நூலகஆசிரியை
Category: Teachers
பெண்ணே!
பாலின்நிறமும்நீ பாயும்புலியும்நீ காற்றில்சந்தனம்நீ காட்டுப்புயலும்நீ நிலவின்ஒளியும்நீ நெருப்பின்உணர்வும், நீ தணிக்கும்தென்றலும்நீ தகர்க்கும்பூகம்பம்நீ நதியின்சூழலும்நீ நடுவினில்சுனாமியும்நீ மெழுகின்மென்மையும்நீ மின்னல்கீற்றும்நீ அழகின்உருவம்நீ அமைதியின்பிறப்பிடம்நீ அடக்கத்தின்அகராதிநீ அன்பின்வடிவம்நீ புதுப்பிறவிஎடுப்பதும்நீ புதுமுகம்கொடுப்பதும்நீ பெண்ணேபோராடு பூமியைஇயக்கும்இயந்திரம்நீ C.பிரேமா கணினிஆசிரியை
மாணவப்பருவமென்னும் மாபெரும் சக்தி
இளமைப்பருவத்துடன் துடிப்புள்ளதும் எதையும் சாதிக்க வல்லது மானது வளரும் மாணவப்பருவமாகும்.இப்பருவமே மானிட வாழ்க்கையில் முக்கியமான பருவமாகக் கருதப்படுகிறது.இப்பருவத்தைச் சீராக அமைத்துக்கொண்டால் எதிர்காலவாழ்வு வளமாகும்.‘விளையும்பயிர்முளையிலேதெரியும்.’‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற கூற்றுகளுக்கு ஏற்ப இப்பருவத்தில் நாம் எதை விதைக்கின்றோமோ அதுவே பின்னாளில் நமக்குக்கதிராய்க் கிடைக்கும். அவை நல்ல குணங்களாக இருந்தாலும் சரி,தீயகுணங்களாக இருந்தாலும் சரி அதற்கேற்ற பலனை Read More …
அன்பு காட்டுங்கள்
அன்பு காட்டுங்கள் – அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் அறிவு, அழகு, வயது, தகுதி கடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அச்சம் நீக்கும்; சினம் தவிர்க்கும்; நட்பு பலப்படும்; உறவு மேம்படும்; அகந்தை அகலும்; அகம் சிறக்கும்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் மதம், மொழி, இனம், நாடுகடந்து அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் போரைத் தவிர்க்கும் பொறாமை நீங்கும்; Read More …
நேசி–யோசி
காதோரம் கதை கூறிடும் தென்றலை நேசி உலகை உய்வித்து ஒளிர்ந்திடும் வெய்யோனை நேசி தேய்ந்தாலும் வானில் சுழன்று கவியாய் உலவிடும் நிலவை நேசி வடிவமது மாறினாலும் கடிதே சென்றிடும் கொண்டலை நேசி எட்டிப்பிடிக்கும் தூரமே வாவென நவின்றிடும் விண்ணை நேசி கால்தொட்டு முத்தமிடும் கடலலையை நேசி என்னோடு ஆடவா வென்றழைக்கும் மழையை நேசி வாழ்க்கையில் வளைந்து Read More …
படைத்திடு புது உலகை
இருள் சூழ்ந்த கருவறையிலே இருந்த நீயும் நடையிடவே வந்தாய் இப்புவிதனிலே! விரல் பிடித்தே தந்தையின் கைக் கொண்டு பதம் பதித்தாய் நீயும் பாடசாலையிலே வந்து நடையிட்டு! ஆசான் ஏற்றிடும் ஏணியிலே ஏறியே நீயும் தொட்டிடுவாய் முகிலுடன் விளையாடும் விண்ணையே! விண்ணையே தொட்டிட்டாலும் கற்றதைக் கைக்கொண்டு கேடுற்ற சமூகத்தைத் திருத்தியே நீயும் நடையிடு உறுதியோடு! வாழ்த்தையும் வைதலையும் Read More …
எதிர்பார்ப்பு…
எதிர்பார்ப்பு… என் மாணவக் கண்மணியே! விழி விரிந்த கனவுகளுடன் கைக்குள் அடங்காக் காற்றாய் சிறகு விரித்த பட்டாம்பூச்சிகளாய் கொஞ்சித் திரியும் கிளிகளாய் நடமாடும் கவிதைகளாய் உலா வரும் நீ என்று தொடுவாய்? வானத்தைக் காத்திருக்கிறேன் எதிர்பார்ப்புடன்… ஹெலன் விலங்கியல் ஆசிரியை என்.எஸ்.என். நினைவுப் பள்ளி
எல்லைகள் மீறினால்…
எல்லைகள் மீறினால்… கடல் அலை கரை தாண்டாத வரை கடற்கரை அழகு!!! அலை கரை மீறினால்… காற்று மிதமாய் வருடும் வரை தென்றல் சுகம்!!! காற்று கட்டுக்கடங்காமல் வீசினால்… ஆற்றில் நீர் அளவோடு பாயும் வரை ஊருக்கு ஆறு அழகு!!! ஆறு கரை புரண்டால்… நிலம் நடுங்காத வரை நாம் நலமாய் வாழலாம்!!! நிலம் சினம் Read More …
மகள்
மகள் மகளே! உனை நான் எவற்றோடு ஒப்பிடுவேன்? நாள்தோறும் தேயும் நிலவோடா? மாலைக்குள் வாடிடும் பூக்களோடா? சோகமும் இழையோடும் பாடலோடா? மேகத்துள் மறைந்திடும் சூரியனோடா? வெள்ளமாய் மாறிடும் நீரோடா? பகலில் தெரியா தாரகையோடா? சூறாவளியாய் மாறிடும் காற்றோடா? எவற்றோடு ஒப்பிடுவேன் ??? வாழ்க்கையில் அர்த்தமாய் ஆண்டவனின் அருளாய் வற்றாத செல்வமாய் தெவிட்டாத அமுதமாய் மகிழ்ச்சியின் சின்னமாய் Read More …
ஓட்டம்
ஓட்டம் காலை வேளையில் கால்களுக்கும் கடிகார முட்களுக்கும் – நடக்கும் நீயா? நானா? போட்டியில் காலதேவனே பலமுறை வெல்கிறான் – ஏனிந்த ஓட்டம்? சிந்தித்தேன். தாயின் கருவறை நோக்கி தந்தையிடமிருந்து ஓடுகிறோம். பிள்ளைப்பருவத்தில் பள்ளியை நோக்கி ஓடுகிறோம். பதின் பருவத்தில் நண்பர்களை நோக்கி ஓடுகிறோம். குமரப்பருவத்தில் அழகை நோக்கி ஓடுகிறோம். கற்றுத் தெளிந்திட கல்லூரியை நோக்கி Read More …