இணையமும் , இளையத்தலைமுறைகளும்

20

இன்று உலகமே விரல் நுனிக்குள் வந்துவிட்டது என்று கூறலாம்.  இதற்கு முக்கிய காரணம் இணையமே.  அதிக பரப்பளவு இடத்தையும் அதே நேரத்தில் அதிவேகமாகப் பயன்படுகிற தொலைத் தொடர்புச் சாதனம் இணையம் என்றால் அது மிகையாகாது.

            இருபதாம் நூற்றாண்டின்  மிகப்பெரிய கண்டுபிடிப்பென்று  கணினியைக் கூறலாம்.  அதன் அடுத்த கட்டமாக கணினி மூலம் உலகெங்கும் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தும் இணையத்தைக் கூறமுடியும்.

            இணையம் இன்றைய தலைமுறைகளுக்கு மிகப்பெரிய தகவல் தொடர்புச் சாதனமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.  இன்றைய இளையத்தலைமுறைகள் பல துறைகளில் செழிக்கின்றனர்.  அதற்கு முக்கிய காரணம் இணையமே.  இன்றளவில் சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள இன்று தபால் துறையை விட இணையத்தையே பயன்படுத்துகின்றன.  என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் கல்வித்துறையில் மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை குறிப்பிட்ட மின் முகவரியுள்ள வலைத் தளத்திற்குச் சென்று சேகரித்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மருத்துவத் துறையிலும் நவீன சிகிச்சை, அறுவை சிகிச்சைகளில் தேவையான தகவல்களைத் திரட்டவும் மேலை நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு மருத்துவத் தகவல்களைச் சேகரிக்கவும் இணையதளம் பெரிதும் பங்காற்றுகிறது.

            இன்றளவில்  இணையத்தில் இதழ்களும் வெளியாகின்றன.  இதைப் பயன்படுத்தி உலகளாவியத் தகவல்களை பொதுமக்களும் தெரிந்து கொள்கின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

            ஆகவே இணையம் இளையதலைமுறைகளான நமக்கு பல வகையில் நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.  தகவல் தொழில் நுட்பத்தின் உயர்ந்த நிலையான இணையதளத்தை நாம் நல்லவண்ணம் பயன்படுத்திப் பயனடைவோம்.

ரா.அம்ருதா

IX ‘அ’