
நாம் மரங்களை வளர்த்தாலே இயற்கை பாதுகாக்கப்படும். மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!1 என்கிற வாசகங்களை நாம் எல்லா இடங்களிலும் காண்கிறோம். அசாமில் மரங்கள் அடர்ந்துள்ள சிரபுஞ்சி தான் உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடமாக அறியப்படுகிறது.
இந்தியாவில் எட்டில் ஒரு பங்கு அளவே காடுகள் உள்ளன. நாம் நம் வீட்டில் மரங்களை வளர்த்தால் அது தூயக் காற்றைத் தரும் மற்றும் பறவைகளுக்கான வாழிடமாகவும் அமையும். நம் ஊரில் ஓடும் ஆறுகளை சுத்தமாக வைத்திருந்தால் விலங்குகளுக்கு அது நன்மையாக அமையும்.
நாம் நம் இந்தியாவை மாசுபடாமல் காக்க வேண்டும். காடுகள் மண் அரிப்பைத் தடுக்கும். சிற்றாறுகள் தோன்ற உதவியாக இருக்கும். அருவிகளில் நீராடும் சுற்றுலாப் பயணிகள் மூலிகைகள் கலந்து விழும் அருவியில் இயற்கையாக நீராடாமல் வேதிப் பொருட்களான சோப்பு. சாம்பு போன்றவைகளைக் குளிக்கப் பயன்படுத்துகின்றனர். இதனால் நீர் மாசுபடுகின்றது. நீர் மாசடைய நாமே காரணமாகின்றோம். நாம் சில வழிமுறைகளப் பின்பற்றினால் நம்மால் இயற்கையைப் பாதுகாக்க முடியும்.
க. மதுமிதா
8 ‘பி’
