என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்!

உலகிலுள்ள அனைத்து வளங்களையும் பெற்று, வரலாறு படைத்த நாடு இது.  ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மாறிவிட்டது.  வளம் மிகுந்து வாரி வழங்கிக் கொண்டிருந்த  நாம் இப்பொழுது வயிற்றுப் பசிக்காக மற்ற நாட்டினரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறோம்.  ஏன் நமக்கு இந்த நிலை ஏற்பட்டது?விதியின் விளையாட்டா ? இல்லை, இந்நிலைக்கு நாம்தான் காரணம்.  ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் பெற்றோர் நீ வெளிநாட்டில் வேலை பார் ! வெளிநாடு சென்று விடு என்ற கொடிய நஞ்சு போன்ற கெட்ட சிந்தனையை ஊட்டி வளர்க்கின்றனர்.  அப்துல்கலாம் போல் ஆக வேண்டும் என்று கூறினால் போதாது, அவரைப் போலவே நாட்டுப்பற்று மிகுந்து வாழ வேண்டும் என்று கூறுங்கள், ஐந்தில் வளையாத எண்ணம் ஐம்பதில் வளையாதாம்.  ஏன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும்,  இந்தியாவில்தான் மனிதர்களே தோன்றினர்.  ஆனால் வெளிநாட்டில் வளர்ந்து விட்டனர், நாமோ அவர்களின் வளர்ச்சிக்குத் துணை நிற்க்கின்றோம்..  உதவுவது தவறில்லை.  தேசத்திற்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாதது.  இன்று முதல் உறுதிமொழி  எடுப்போம்.  அவர்களால் முடியுமென்றால்  நம்மாலும் முடியும்.  100 நபர்களில் ஒரு அப்துல் கலாம் போதும் ஒரு காந்தி போதும் நம்மால் இச்சூழ்நிலையை மாற்ற முடியும்.

     ஒன்று கூடுவோம்! வெற்றி காணலாம் விண்ணிலே வாழலாம்.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்!

பா.கிரண்

IX A