சரித்திரம் படைத்திடு

ஆயிரம்   தடைகளை நீ தாண்டி

சரித்திரம் படைத்திடு முன் ஓடி

அந்தப் படைப்பை அடைந்திடு போராடி,

பறவையாய்ப் பறந்து நீ தேடி,

தேடியவற்றை மனம் பாடி,

அத்தேவையை நிறைவேற்று நீ வேண்டி

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கனவு.

அதனில் ஒன்று உன் லட்சிய நினைவு.

அதைப் பார்த்து உன் மனம்  அடையும் தெளிவு.

அந்த லட்சிய நினைவில் நீ வைக்காதே குறைவு.

ஆயிரம் விவசாயிகளின் மின் விளக்கு நிலவு,

அதற்கு எப்பொழுதுமே இல்லை குறைவு,

அதைப் பார்த்து உன் முகத்தில் ஒரு பொலிவு.

அதைக் கண்டு உன் மனம் அடையும் தெளிவு

நிலவைப் பார்த்தால் மனம் அடையும் மகிழ்வு.

அதைக் காணாமல் இருந்தால் முகத்தில் ஒரு சுளிவு.

கெ.எ. பவித்ரா

9 ‘அ’