
எங்கள் வீட்டுப் பிள்ளை எங்களுடன் வாழும் பிள்ளை
துன்புறுத்த மனம் வருமோ?
எங்கள் கலாச்சாரம் பலவருட பாரம்பரியம்
விட்டுக் கொடுக்க மனம் வருமோ?
அநீதி நடக்கிறது சதி நிகழ்கிறது
வாயடைந்திருக்க மனம் வருமோ?
ஒன்று சேர்ந்து வென்றிடவும் தெரியும்.
ஒற்றுமையாக இருந்து அழித்திடவும் தெரியும்.
ஆங்கில அமைப்பு வென்றதோ?
தமிழரின் கோரிக்கையைக் கொன்றதோ?
துன்புறுத்துவது உங்களது விளையாட்டென்றால்,
எட்டி உதைத்து எழுவது எங்கள் வீரமாகும்.
நித்யஸ்ரீ . ம
XI ‘அ’
