தடைகளை தாண்டி

தடை என்று எண்ணியவுடன் நமக்கு நினைவிற்கு வருவது உசேன் போல்ட்  தான்.  அவர் செய்த சாதனைகshளால் அவரை நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது.  அவர் பல தடைகளைத் தாண்டியே சாதனைகளை படைத்துள்ளார்.  நாமும் வாழ்வில் வரும் தடைகளைத் தாண்டியே வெற்றி என்னும் பழத்தைப் பெற முடியும்.  தடைகளோ சோதனைகளோ வாழ்வில் இல்லையென்றால் மேலும் முயற்சித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.  அப்படியே அது எளிதில் நமக்குக் கிடைத்து விட்டால் அதனுடைய மதிப்பு நமக்குத் தெரியாது.  வாழ்வில் தடைகள் வேண்டும், தடைகளைத் தாண்டி வர மன வலிமையும் வேண்டும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப துன்பம் வந்தாலும் துணிவுடன் நாம் அதனை எதிர்கொண்டால் வெற்றி நமதே.  வெற்றிப் படிக்கட்டை அடைய பல தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும்.  நீங்கள் உங்கள் வாழ்வில் வரும் தடைகளைத் தகர்த்து வெற்றிக் கொடி நாட்டுங்கள்.  தடை,  நமக்கு எதிரே ஒரு படையாக வந்தாலும் அதனை உடைக்க அதற்கு ஒரு விடையறிந்து வென்று காட்டுவோம்.

தடைகளைத் தாண்டுவோம் !!

வாழ்வில் வெற்றி பெறுவோம் !!!

கா.கோ.நித்ய ஸ்ரீ

IX