தாய்

நான் பார்த்த முதல் இடம் உன் கருவறை.

நிலவை அழகாய் காட்டுவது தேய்பிறை.

நான் பெற்ற முதல் கொடி தொப்புள் கொடி.

நிலவு ஒரு அழகான பூங்கொடி.

நீ பாடிய தாலாட்டு.

அதுவே நான் கேட்ட முதல் பாட்டு

நான் சுவைத்த முதல் உணவு உன் தாய்ப்பால்.

அதுவே எனக்குக் கிடைத்த அன்புப் பால்

உன் அன்பு ஒன்றே மெய்ப்பால்.

கு.ஸ்ரீலக்ஷனி

X  B