நினைக்க நினைக்க நம்மை அடையும் !

உலகில் பலருக்கும் தெரியாத ரகசியம் உண்டு.    அதில் ஒன்று எண்ணமே வாழ்வு.  இதன் பொருள் எண்ணம் போல் வாழ்க்கை.   அதாவது நாம் எதில் கவனம் செலுத்தி அந்த பொருள் வேண்டும் என நினைத்தால் அதை நாம் கண்டிப்பாக அடைந்து விடலாம். ஆராய்ச்சியாளர்கள் நம் மனதில் 60000  க்கும் மேற்பட்ட எண்ணங்கள் ஓடுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.  ஒரு பொருள்  நமக்கு வேண்டுமெனில் நாம் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் அது  ஆசை,   நம்பு ,  பெறு .  ஒரு பொருளுக்கு முதலில் நாம் ஆசைப்பட வேண்டும்.  இரண்டாவது,  அந்தப் பொருள் நம்மிடம் உள்ளது என்று நம்ப வேண்டும்.    மூன்றாவது அந்தப் பொருளைப் பெறுதல்.  நாம் எப்போதெல்லாம் சிந்திக்கிறோம் அப்போதெல்லாம் அந்தச் சிந்தனை பிரபஞ்சத்திற்குச் சென்று விடுகிறது. எப்பொழுது அது செல்கிறதோ அப்போதெல்லாம்  அந்த பொருள் நம்மிடம் வரும் வாய்ப்பு அமைகிறது.  ஆகையால் சிந்திக்கச் சிந்திக்க அந்த ஆசைப்பட்ட பொருள் வந்து கொண்டிருக்கும்.

அரவிந்தாக்ஷன்

9-