பயிர் வாழ்ந்தால் உயிர் வாழும்

ஒரு காலத்தில் நம் நாட்டில் வேளாண்மை முக்கிய பங்கு வகித்தது.  வேளாண்மையில் தஞ்சாவூர் சிறந்து விளங்கியது.  அந்தக் காலத்தில் வேளாண்மை  இயற்கை முறையில் நடந்தது.  அனைவரும் உழவுத்தொழிலைப் போற்றினர்.  பொன்போல மதித்தனர்.  உழவுதொழிலால் நம் நாடும் வளம் பெற்றது.  இது அறியாமல் இக்காலத்தில் வேளாண்மை என்பது ஏழை மக்கள் அதாவது வறுமையில் வாடும் மக்கள் செய்யக் கூடிய ஒரு தொழிலாகப் பலரும் கருதுகிறார்கள்.  இப்போதெல்லாம் ஐ.டி.யில் வேலை செய்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்.   நம் நாட்டுத் தலைவர்கள் பலரும் வேளாண்மையை மதித்துப் போற்றினர். பல புலவர்களும் வேளாண்மை சார்ந்த பாடல்களைப் பாடினர்.  இராமலிங்கர் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார்.

நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள்தான். அதனால் எனக்கு உழவர்கள் படும் துன்பம் பற்றி நன்றாகத்தெரியும். இந்தியாவின் வாழ்வு என்பது  இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு தான்.  அந்த கிராமங்களின்  வாழ்வு  அந்நாட்டு  உழவர்கள் கையில் தான் இருக்கிறது.

உழவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான்

நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

எனவே உழவுத்தொழிலை வளர்ப்போம்! இந்தியாவைக் காப்போம்!

பயிர் வாழ நாம் வாழ்வோம்!

சோ.மலர்விழி.

10 ‘அ’