சிரிக்கத் தெரிந்தவன்

நம் முன்னோர் காலத்திலிருந்து இன்று வரை மாறாதிருப்பது நகைச்சுவை மட்டுமே.  சிறியவர் முதல் முதியவர் வரை சிரிப்பு மட்டுமே மாறாமல் இருக்கிறது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பதை நாம் மறவாமல் இருக்க வேண்டும்.  நம் மனதில் இருந்து புன்னகைக்க வேண்டும்.  நம் மனத்தில் எத்தனை வருத்தம் இருப்பினும் ஒரு நகைச்சுவையைக் கேட்டால் நாம் சிரித்து விடுவோம்.  நம் புன்னகைக்கு மட்டும் இந்த உலகில் எந்த மூளையிலும் தடையில்லை.   சிரிப்பு ஒன்றே அழியாத வரம்.  சிரிப்பு அழிக்க முடியாத பாதுகாப்பு அரணாகும்.  நமமைச் சிரிக்க வைப்பதற்காக நடிக்கும் நடிகர்கள் பலர்.  அவர் ஏற்படுத்தும் நகைச்சுவையில் நாம் நம் மனம் விட்டு சிரிப்பதுண்டு.

சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே,  நமக்குக் கிடைத்த ஒரு மிகச்சிறந்த ஒரு வரம் சிரிப்பு.  வரும் காலங்களிலும் அதை மறவாது பாதுகாக்க வேண்டும்

பேச்சில் வரும் சொற்சுவை

அதுவே நகைச்சுவை.

நாம் மட்டும் நகைச்சுவையோடு இருப்பதை விட,  மற்றவர்களையும் நகைக்க வைப்போம் !

பீ. முகம்மது அஜீபா

  12- ஆ