நான் விரும்பும் மாயதேசம்

நான் விரும்பும் மாயதேசம் எனக்குக் காட்டுப்பகுதியைச் சார்ந்து இருக்க வேண்டும்.  அது ஒருமிகப் பெரியதேசமாக இருக்கவேண்டும்.அதில் எனக்கு ஒரு பெரிய வீடு வேண்டும்.  அது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.  அதன் வெளியே நிறைய மரங்கள் இருக்கவேண்டும்.  அந்தமரங்களில் எல்லாப்பழங்களும் பழுத்து இருக்க வேண்டும்.  அந்தவீட்டில் எல்லா இனிப்பு வகையும் இருக்கவேண்டும்.  அங்கு நல்ல காற்று வீச வேண்டும். அங்கு எனக்குப் பிடித்த மிருகங்களும் இருக்க வேண்டும்.சாப்பிட உணவும் குடிக்கத் தண்ணீரும் இருக்க வேண்டும். படுத்து உறங்குவதற்கு மரங்களில் கட்டில் வேண்டும். அங்கு எந்தவிபத்தும் நடக்காமல் இருக்க வேண்டும். அங்கு உள்ள எல்லா மரங்களும்,விலங்குகளும்அழியாமல் இருக்க வேண்டும். அங்கு எப்பொழுதும் நிலவொளியும் சூரிய ஒளியும்  இருக்க வேண்டும் இப்படி எல்லாம் இருக்கும் அந்தவீட்டிற்குஅன்புஇல்லம்”என்றுபெயர்வைப்பேன்.

                                                                                    வ.  சேதுராமன்

            ஆறாம்வகுப்பு “இ” பிரிவு

நான் விரும்பும் மாயதேசம் முழுவதும் பனியாக இருக்க வேண்டும் அதில் எந்த விதமான புழு,பூச்சிகளும் இருக்கக்கூடாது. அங்கு எந்தவித நோய்களும் கேட்கவும் பேசவும் முடியாத மக்கள் போன்றயாரும் இருக்கக்கூடாது.அங்கு அனைவராலும் பறக்க முடியவேண்டும்.அங்கு  பணம்,காசு இல்லாமல் அனைத்தும் இலவசமாகக்கிடைக்கவேண்டும்.அங்கே சண்டைகள் இருக்கக்கூடாது.அங்கு மரத்தில் மிட்டாய்கள் காய்த்துத் தொங்கவேண்டும்;ஆறுகளில் குளிர்பானங்கள் ஓட வேண்டும். அங்கு வானவில் எப்போதும் இருக்கவேண்டும். அதில் உள்ள ஏழு வண்ணங்களிலிருந்து ஏதேனும் ஒரு வண்ணத்தை,ஒரு பொருளால் தொட்டால் அது அந்த நிறத்திற்கே மாறிவிடவேண்டும். நான் விரும்பும்மாய தேசம் இத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

ஜெ. ஜாஃப்லின்கெஸியா

                                                            ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு

என்னுடைய மாயதேசத்தில் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் செய்யவேண்டும்.பள்ளி முடிந்தவுடன் நமது பேருந்துதானே இயந்திரமாக பள்ளிக்குவரவேண்டும்.பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நீக்க இயந்திரத்தைக்கேட்கலாம்.காலை முதல் இரவு  வரை இயந்திரங்களே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும் அப்படி இருந்தால், மனிதர்கள் செய்யும் வேலைகள் குறையும்.உணவை செய்யக்கூட இயந்திரம் வேண்டும்.நாம் கேட்பது அனைத்தையும் இயந்திரம் செய்ய வேண்டும். இந்த உலகமே நவீன தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்.இதுவே நான் விரும்பும் மாயதேசத்தில் இருக்க வேண்டும்.

ரோஹித்.

ஏழாம்வகுப்பு ‘இ’ பிரிவு

என்னுடைய மாயதேசத்தில் ஒரு பெரிய வீடு மற்றும் சுற்றிப்பூக்கள் நிறைந்த ஒரு பெரிய தோட்டம் இருக்க வேண்டும்.என்னுடைய மாயதேசம்மிகவும் அழகாக இருக்க வேண்டும்.என் மாயதேசத்தில் வானம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.அந்த தேசத்தைச் சுற்றி முழுவதும் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.என்னுடைய தேசத்தில் தானே இயங்கும் கருவிகள் இருக்க வேண்டும்.என் உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.என் தேசத்தில் அனைவராலும் பறக்க முடியும்.என் தேசத்தில் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்கும்.அனைவருக்கும் தேவையான வசதிகள் அங்கு இருக்கும்.

வாமிகா

ஏழாம்வகுப்பு ‘இ’ பிரிவு

நான் விரும்பும் மாயதேசம் மிகவும் புதுமையானது.  அதில் பறவைகள் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். மயில் பறக்க வேண்டும். அதில் நான் கூறியது எதுவாக இருந்தாலும் நிகழவேண்டும். அதில் மனிதர்கள் செல்லப்பிராணிகளாக புலி, சிறுத்தை, போன்றவற்றை வளர்க்க வேண்டும். அங்கு வாகனங்கள் பறக்க வேண்டும். அங்கு உள்ள மரங்கள் செடிகள் அனைத்தும் சிவப்புநிறத்தில் இருக்க வேண்டும். தண்ணீருக்குப் பதிலாக பழச்சாறு அருவியாகக் கொட்டவேண்டும்.

ஹரிஷ். செ

ஏழாம் வகுப்பு  ‘இ’ பிரிவு

இந்த உலகத்தில் எல்லா இடமும் வைரம்,தங்கம் இருந்தால் எப்படி இருக்கும். மிகருசியான சாப்பாடு, வீடு, மனிதர்களையே உண்ணும் விலங்குகள் நிரம்பிய காடு.ஆனால், எனக்கு வைரத்தால் செய்த வீடு, உணவுகள் தரும் மரம், நெருப்பு உள்ள ஆறு வேண்டும். அந்தமாய தேசத்திற்கு நான் அரசன். எனக்குப் பறப்பதற்குச் சிறகுகள், தங்கத்தால்செய்தபடைவீரர்கள் இருக்க வேண்டும்.. இது எனது தேசம் ,என் மாயதேசம் என நான் முழங்குவேன். எதிரிகளை என் கையளவு சுருக்கி அவர்களை அழிப்பேன். மரங்களின் வேர்கள் நடனமாடும், ஆறுக்குக் கைகள் உண்டாகும், பனிக்காலத்தில் பூக்கள் நெருப்பாக மாறி குளிர்காய உதவி செய்யும். பூக்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசும் காட்சியே தனி அழகு. என் கோட்டையின் சுவரைத் தவறான எண்ணத்தில் தொட்டால் தொடுபவர் சாம்பலாகிவிடுவர்.

ஹரிக்ரிஷ்ணா. பி.எஸ்

ஏழாம் வகுப்பு ‘அ’

நான் விரும்பும் மாயதேசத்தில் ஒரு அழகான பூந்தோட்டமும் பெரிய பெரிய பசுமையான மரங்களும் இருக்க வேண்டும்.அந்த நகரத்தில் சிறிய சிறிய குழந்தைகள் இருக்க வேண்டும்.அந்த இடத்தில் நிறைய மாயங்கள் நடைபெறவேண்டும்.அங்குப் பெரியகட்டிடங்கள் இருக்காமல் சிறிய வீடுகள்தான் இருக்கவேண்டும். அங்குத் தொழிற்சாலைகள் மற்றும்ம கிழுந்துகள் இயற்கையை மாசுபடுத்துவது போல் இருக்கக்கூடாது.அங்கு இருக்கும் மக்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

இரா.அபர்ணா

எட்டாம்வகுப்பு ஆ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *