இந்தியாவும் வேளாண்மையும்

“கடவுள் எனும் முதலாளி  கண்டெடுத்த தொழிலாளி  –  விவசாயி”

என்ற பாடல் வரிகளுக்கு இணங்க விளங்குகிறார்கள். விவசாயிகள் .  இவ்வாறு இருக்க… எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.  விவசாயிகள்   தொழிலாளர்களா என்று, யார் அவன்?  கடவுளாகப் போற்றப்பட வேண்டியவன்.  ஆனால் இப்போது அவன் தொழிலாளியாகக் கூட நினைக்கப்படவில்லை.  மறைமுகமாகக் கொல்கின்றனர்.  ஏன் ?

இந்தியாவை மறந்தீர்கள் !

தமிழை மறந்தீர்கள் !

தாயை மறந்து , தந்தையை மறந்து , நண்பனை மறந்து,

இறுதியாக வேளாண்மையை மறந்தீர்கள் !

வேதனையாக உள்ளது,  வெட்கமாக உள்ளது.  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்க்குடி (தமிழினம்),  நன்றாகத்தான் சென்றது  வேளாண்மை.  மண்ணிற்காகவும், சொத்திற்காகவும்,  உங்கள் சொந்த ஆசா, பாசத்திற்காகவும் கொன்றீர்கள், தமிழை, கலாச்சாரத்தை, நாகரீகத்தை, மற்றும் வேளாண்மையை.  இவ்வாறு இருப்பினும் ஒரு சில வகையில் பார்த்தால் வேளாண்மை சொல்லும் வகையில்தான் செல்கிறது.  அரசாங்கம் தரும் பயிர்கள் மூலம் பல விவசாயிகள் பலனடைகின்றனர்.  இருப்பினும் சிலர், விவசாயம் செய்ய இயலாமல் வருந்தும் வகையில் தங்களது உயிரைத் துறக்கின்றனர்.

யாருக்காகச்c செய்கிறார்கள் விவசாயம் தங்களுக்காகவா, அல்லது தங்கள் பிள்ளைகளுக்காகவா?  நமக்காகத்தான் செய்கிறார்கள் நண்பா.

எதற்கு விவசாயிகளைப்  போற்ற  வேண்டும்;  புகழ வேண்டும்   என்று

சிந்திக்கும் நீ ஒரு புறம் இருந்தால், எதற்கு நான் விவசாயம் செய்ய வேண்டும்  நான் ஏன் உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவன் நினைத்தால் அனைவரும் செத்து விடுவோம் தமிழா !

இந்தியாவை உயர்த்தும் பொறுப்பு உன்னிடமும் உள்ளது  ஏனென்றால் நீ உன்னிடம் உள்ள அனைத்து செல்வங்களையும் சரியாக உபயோகித்தால் நிச்சயம் வேளாண்மை வளரும்; நாடு செழிக்கும் ;நாட்டு மக்களின் மணம் மகிழும்.  இதற்கு மற்ற மாநிலங்களும் உன்னுடன் சேர்ந்தால் அருமை!  ஆனால், இங்கு நீயோ உன் திறமையை மறந்து நடமாடுகிறாய்.

நம் வீர விளையாட்டை தடை செய்தால் நாட்டு மாடு அழியும். வெளி நாட்டு நிறுவனங்கள் வியாபாரம் கூடும். தமிழன் தன் மகத்துவத்தை இழந்து மடிவான் என்பதை முன் கூட்டியே அறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நீ விவசாயிகளுக்காகவும் வேளாண்மைக்காகவும், தமிழனுக்காகவும் , இந்தியாவிற்காகவும் எழுந்து  வருவதென்ன கடினமானதா ? இல்லை தவறானதா ?

எழுந்து வா தமிழனே !

எழுந்து வா இந்தியனே  !!

நாட்டைக் காக்கும் முக்pfpfகியப் பொறுப்பை விவசாயியிடம் அளித்தோம்

அவனது சிறப்பை மறக்கும் வகையில் அவனை உருத்தெரியாமல் அழித்தோம் மனை வாங்கி கட்டடம் கட்டினோம்.

நல்லவனை குற்றவாளியெனக் கூறி விரலை நீட்டினோம்.

தற்போது அகதிகளாக அந்நியர்களிடம் கையேந்தினோம்

காரணம்

   அடையாளத்தை மறந்தது;

   கலாச்சாரத்தை விற்றது;

   வேளாண்மையை நிறுத்தியது;

   விவசாயியைக் கொன்றது;

    ஒன்றுபட்டால் சாதனை செய்யலாம்.

ஒன்றுபடுவோம்  நாட்டை வளர்ப்போம்;

வேளாண்மையைக் காப்போம்!!!

சு.ராகுல்

11 ‘அ’