வெற்றிப் படிகள்

நிலா தூரம்தான்.

அதில் காலடி பதிக்கும் வரை.

மலை உயரம்தான்

அதன் உச்சியைத் தொடும் வரை.

விண்வெளி வியப்பானதுதான்

அதில் ஏவுகணை விடும் வரை.

கடல்நீர் ஆழம்தான்

 பவளங்களைப் பார்க்கும் வரை.

கற்றல் கடினமானதுதான்

கற்ற பொருள் கைகொடுக்கும் வரை.

ரோஜா முட்கள் நிறைந்ததுதான்

அதன் வண்ணம் கண்டு வியக்கும் வரை.

தோல்விகள் துன்பம்தான்

அதில் வெறியைக் காணும் வரை.

வி.சந்தியா

12 எ