எனக்கு சட்டம் இயற்றும் வாய்ப்புகிடைத்தால்.

எனக்குசட்டம்இயற்றும்வாய்ப்புக்கிடைத்தால்நான்நாட்டில்உள்ளஅனைத்துகுழந்தைகளுக்கும்இலவசமாககல்விகற்கவழிசெய்வேன்.இலவசஅறுவைசிகிச்சைக்குவழிசெய்வேன்.தேர்வுமுறைசுமைஇல்லாமல்கல்விகற்றல், மற்றும் திறமைகளுக்கு முக்கியம் தரும் வகையில் பாடங்களை உருவாக்குவேன்.ஐந்தாம்வகுப்பு,எட்டாம்வகுப்புபொதுத்தேர்வைஇரத்துசெய்வேன்.அனைத்து சமூகமக்களையும் சமமாக மதிப்பளிக்கத்தவறும் மக்களுக்குக்கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தினை வழங்குவேன்.சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு விரைவில் தண்டனை வழங்கும் வகையில் காலவரையறையுடன் முடிக்கும் விதத்தில் சட்டத்தினை இயற்றுவேன்.

                                                            பி.  தரண்ராம்,

ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு

 எனக்குசட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் இந்தநாட்டின் ஏழைமக்களுக்கு உதவும்வகையில் சட்டம் இயற்றுவேன். அவர்களுக்கு மருத்துவவசதி, தண்ணீர்ப்பற்றாக்குறை நீக்க, தண்ணீர் வசதி அமைத்துத்தரவிவசாய இடங்களில் பயிர்செய்ய ஏற்றவகையில் ஏற்பாடு செய்ய சட்டம் இயற்றுவேன். திறந்திருக்கும் ஆழ்குழாய்க்கிணறு அனைத்தையும் மூடிவைக்குமாறும்  சட்டம் இயற்றுவேன்.

எம்.  தீக்ஷனா

ஆறாம்வகுப்பு “ஆ” பிரிவு

எனக்கு சட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால்

பள்ளிகளில் நீச்சல்குளம் அமைக்க ஏற்பாடு செய்வேன்.

குழந்தைத் தொழிலாளரைவைத்து வேலை செய்பவரைக்கைது செய்வேன்.

பெண் குழந்தைகளுக்கு 23 வயதாகும்வரை கட்டாயக்கல்வி என அறிவிப்பேன்.

குழந்தைகளுக்குப்பிடித்த எதிர்கால வேலையைத் தாங்களே தேர்வு செய்யுமாறு பெற்றோர்கள் வாய்ப்பு அளிக்கவேண்டும் என சட்டம் இயற்றுவேன்.

வேலைவாய்ப்புகள் ஒரு இடத்தில் இல்லை என்றால் அக்குடும்பத்தலைவன் வேறு ஊர்களுக்குச்செல்லலாம்; அப்படிச்செல்லும்பொழுது அந்த குடும்பத்திற்கு எல்லாவசதிகளையும் அரசாங்கம் அளிக்கவேண்டும்.

பள்ளிகளில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்றெல்லாம் சட்டம் இயற்றுவேன்.

மஹேஸ்வரி . ம

ஏழாம் வகுப்பு  ‘அ’ பிரிவு

எனக்கு சட்டம் இயற்ற வாய்ப்புக்கிடைத்தால் மிகவும்மகிழ்ச்சி. இவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் அதை நான் உறுதியாகப் பயன்படுத்திக்கொள்வேன். ஒருவரின் சொந்தநாட்டில் சட்டத்தை இயற்றுவதில் எல்லோருக்கும் ஆசைகள் இருக்கும். எனது நாடாகிய இந்தியா ஒருவளர்ந்துவரும்நாடு. ஐயா ஏ.பி.ஜேஅப்துல்கலாம் அவர்கள் 2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்குக் கனவுகாண வேண்டும். கனவு என்பது தூக்கத்தில் அல்ல விழித்திருக்கும் போது கண்டு அதைத்துரத்துவது. கனவைக்கண்டால் மட்டும் போதாது அதைத்துரத்தி இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார். ஆனால் இப்பொழுது 2019 ஆம் ஆண்டு வளர்ச்சிகள் இருந்தாலும் இன்னும் வளர்ந்த நாடாக மாறவில்லை. இந்தமாற்றம் இல்லாமல் இருப்பதற்கு சட்டத்துக்குக் கீழ்படிந்து நடக்கும் மக்கள் சிலர்மட்டுமே உள்ளனர். இதனையெல்லாம் நான் சரியான வழிக்குக் கொண்டு வருவேன். மக்களும் என்னுடன் ஒத்துழைப்பு தந்தால் நாம் இந்தியாவை 2035 ஆம் ஆண்டிலாவது வளர்ந்த நாடாக மாற்றலாம். இதற்கு சட்டத்தை சிறிதளவு மாற்றி மக்கள் தவறு செய்தால் கட்டவேண்டிய அபராத பணத்தை அதிகமாக்குவேன். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகமாக்குவேன். பள்ளிக்கு பெண்களை அனுமதிக்காத குடும்பங்களுக்கு சொல்லிப்புரியவைப்பேன். கேட்கவில்லை என்றால் சிறையில் அடைப்பேன். இதுபோல் நிறைய சட்டங்கள் இயற்றி நாட்டை முன்னேற்றுவேன்.

மிதிலேஷ்.

ஏழாம் வகுப்பு ‘ஈ’ பிரிவு

 

நான் சட்டம் இயற்றினால் இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவம் இலவசமாகக்கிடைக்க ஆணையிடுவேன்.

குழந்தைகளுக்குக்கல்வி இலவசமாகக்கிடைக்க சட்டம் இயற்றுவேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்குக் காரணமானவர்களின் குடியுரிமைமற்றும் வேலைவாய்ப்பைப்பறித்துக்கொண்டு கடுமையான தண்டனை வழங்கும்வகையில் சட்டம்இயற்றுவேன்.

வயதான பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களின் குடியுரிமை மற்றும் அடையாள அட்டையைப்பறித்துக்கொண்டு அவர்களை நாட்டைவிட்டு விரட்டுவேன்.

பிச்சைக்காரர்கள் இல்லாத நாட்டை உருவாக்குவேன்.

தேர்தலில் போட்டியிட பட்டப்படிப்பு வேண்டும் என்று சட்டம் இயற்றுவேன்.

நாடு முன்னேற வறுமை குறைய வேண்டும்; அதற்காகவும் சட்டம் இயற்றுவேன்.

சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவேன். சாதி பெயரைச்சொல்லி வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பேன்.

பி.ஜோஷிகா

  7-இ

எனக்கு சட்டம் இயற்றும் வாய்ப்புக்கிடைத்தால், இவ்வுலகிலுள்ள அனைத்துத் தீமைகளையும் ஒழிக்கமுயல்வேன். இவ்வுலகத்தையே ஒன்று சேர்த்து முறையாக ஆட்சி செய்ய உதவும்வகையில் சட்டம் இயற்றுவேன். உலகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவேன்.பணத்தட்டுப்பாடு என்றநிலையை ஒழிப்பேன். எல்லா நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதியை அனுமதித்து உலகையே செழிப்பாக்குவேன் .மனிதர்களை மனிதர்களாகவே பார்க்கும்படி செய்து எங்கும் அமைதியைக்கடைபிடிக்கச் செய்வேன்.

ச.அகிலன்

எட்டாம்வகுப்பு ‘ஆ’ பிரிவு

எனக்கு சட்டம் இயற்றும்வாய்ப்புக்கிடைத்தால்நான்பசியில்

வாடியிருப்பவர்களுக்கு உணவு தந்து வீட்டு வசதி செய்து கொடுத்து மகிழச்செய்வேன். சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்துவேன்.உணவகங்களில் நெகிழிப்பொருட்களை உபயோகிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றுவேன்.பொது இடங்களில் குப்பைத்தொட்டிகள் இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றுவேன்.

இரா.புவனேஷ்வரன்

ஏழாம்வகுப்பு ‘ஆ’ பிரிவு

நம் இந்திய நாடு பழம்பெரும் கலாசாரங்களைக் கொண்ட பெருமை மிகுநாடாகும். நம் நாட்டில் சில தீயசக்திகள் அந்நிய நாட்டுடன் கைகோர்த்துக்கொண்டு சட்டத்திற்குப்புறம் பானகலாச்சாரத்திற்கு எதிரான செயல்களைச் செய்துவருகிறார்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய மிகக்கடுமையான சட்டங்களை அமல்படுத்துவேன். சமுதாயத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகமுக்கியமானவர்கள். சமீபகாலமாக இவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இவற்றுக்குக்காரணம் சட்டத்திலுள்ள பல ஓட்டைகளைக் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனைத் தடுத்து பழைய சட்டதிட்டங்களை மாற்றிக்கடுமையான தண்டனை பெறும் படி மாற்றி அமைப்பேன். பயன்படுத்தாத ஆழ்குழாய்க்கிணறுகளைப் பாதுகாப்பாக மூடாததனால் சுர்ஜித் போன்ற எண்ணற்ற குழந்தைகள் விளையாட்டாக அதனுள் தவறிவிழுந்து உயிருடன் மீட்பது பெரும் சவாலாகிவிடுகிறது. இது போன்ற இழப்பினைத் தவிர்ப்பது என்பது சட்டத்தின் மூலமாகவே சரிசெய்யப்பட வேண்டும். அஜாக்கிரதையாகப் பயன்படாத ஆழ்குழாய்க்கிணறுகளைப் போதிய பாதுகாப்பின்றி வைத்திருப்பவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க புதியசட்டத்தைக் கொண்டுவருவேன். பொதுமக்களுக்கு தீங்குவிளைவிக்கும் சமூகவிரோதிகளை அடக்கக்கூடியமிகக் கடுமையான சட்டங்களை இயற்றி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக்குறைப்பேன். அரசு அலுவலகங்களில் கையூட்டு பெறும் அதிகாரிகளை வேலையை விட்டுத்துரத்தும் அளவிற்கு மிகக்கடுமையான முறையில் சட்டங்களைச்சீர்திருத்தம் செய்வேன்.கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை அடக்க தனிச்சட்டம் இயற்றுவேன். மருத்துவமனையில் நடக்கும் கொள்ளைகளையும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்விலும் பணத்தைக் கையூட்டாக பெற்றுக்கொண்டு மனிதனின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களைத் தண்டிக்கும் வகையில் மிகக்கடுமையான சட்டங்களை இயற்றுவேன்.

உ. லேகாஸ்ரீ

எட்டாம்வகுப்புஈபிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *