நண்பேன்டா …………………

எங்கே போனாலும் தூரம் சென்றாலும் நம் நட்பு மாறாதே நண்பா காலம் போயினும் நாட்கள் ஓடினும் நம்  நட்பு பிரியாதே – இதுவரை தினம் பார்த்த அந்த நாட்கள் நினைத்தாலும் வாராத அந்த நேரம் மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா நண்பா? கிடைக்கும். மீண்டும் பிறக்கையிலே…… க.மணிராஜ் X B

தாய்

நான் பார்த்த முதல் இடம் உன் கருவறை. நிலவை அழகாய் காட்டுவது தேய்பிறை. நான் பெற்ற முதல் கொடி தொப்புள் கொடி. நிலவு ஒரு அழகான பூங்கொடி. நீ பாடிய தாலாட்டு. அதுவே நான் கேட்ட முதல் பாட்டு நான் சுவைத்த முதல் உணவு உன் தாய்ப்பால். அதுவே எனக்குக் கிடைத்த அன்புப் பால் உன் Read More …

தியாகத்தின் மறுஉருவம்

தாய் போல அன்பு கொள்ள தாயைத் தாண்டிய உறவில்லை சொல்லில் அடங்கா தியாகம் தந்தவளை சுமை என நான் நினைக்கவில்லை. தியாகமே வடிவானவளே கண் கடக்கும் கண்ணீரும் உனக்காக …………………. அம்ரித்தா ஜாய் . X  B

நாம் முயன்றால்………

காந்தி முயன்றதால் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. ஔவை முயன்றதால் ஆத்திசூடி கிடைத்தது. எடிசன் முயன்றதால் மின்விளக்குகிடைத்தது. திருவள்ளுவர் முயன்றதால் திருக்குறள் கிடைத்தது. நாம் முயன்றால் விண்ணையும் தொடலாம் முயற்சி திருவினையாக்கும்……… முயன்றால் முடியாததும்  இல்லை கா. ஸ்டானிஷ் சாலமோன் X  B

அம்மா

நான் பார்த்த முதல் முகம் … நான் பேசிய முதல் வார்த்தை … நான் கண்ட சிறந்த நட்பு … நான் கண்ட அன்பின் முழு உருவம் …. கருணையின் முழு வடிவம்….. நான் மறக்கவே முடியாத ஒரே ஓவியம் அம்மா ! உலகில் மொத்தம் ஏழு அதிசயங்களா? இல்லை இல்லை. உலகில் ஒரே ஓர் Read More …